Published : 04 Feb 2021 03:14 AM
Last Updated : 04 Feb 2021 03:14 AM
இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் வேலூர் மாவட்ட கிளை நிர்வாகி களுக்கான பொது குழுக்கூட்டம் வரும் 18-ம் தேதி நடைபெறவுள்ளது என செஞ்சிலுவை சங்கத்தின் தலைவரும் மாவட்ட ஆட்சியரு மான சண்முக சுந்தரம் தெரிவித் துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இந்திய செஞ்சிலுவை சங்கம் வேலூர் மாவட்ட கிளையின் ஆண்டு பொது குழுக்கூட்டம் வரும் 18-ம் தேதி (வியாழக்கிழமை) காலை 9.30 மணியளவில் வேலூர் அண்ணாசாலையில் உள்ள சங்கமம் திருமண மண்டபத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் உறுப்பினர்களுக்கு தற்காலிக அடையாள அட்டைகள் வழங்கும் பணி வரும் 9-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் வேலூர் மாவட்ட கிளை அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வழங்கப்படும்.
எனவே, உறுப்பினர்கள் அடை யாள அட்டையை பெற வரும் போது, உறுப்பினர்களுக்கான சான்று (உறுப்பினர் அட்டை அல்லது உறுப்பினர் கட்டணம் செலுத்திய ரசீது) இவற்றில் ஏதேனும் ஒன்றை கொண்டு வந்து தற்காலிக அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளலாம்’’ என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT