Published : 03 Feb 2021 03:17 AM
Last Updated : 03 Feb 2021 03:17 AM

கல்லணையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்படும்புதிய பாலம் மே 31-க்குள் பயன்பாட்டுக்கு வரும் திருச்சி மாவட்ட ஆட்சியர் தகவல்

திருச்சி

திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தை இணைக்கும் வகையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கல்லணையில் கட்டப்பட்டு வரும் பாலத்தை திருச்சி மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: திருச்சி- தஞ்சாவூர் இடையே கனரக வாகனங்கள் மற்றும் இலகுரக வாகனங்கள் செல்வதற்கு வசதியாக கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கல்லணையில் பாலம் கட்டும் பணி 2.12.2016-ல் தொடங்கப்பட்டது. பாலம் இருபுறமும் அணுகுசாலையுடன் சேர்த்து 1,330 மீட்டர் நீளமும், 12.09 மீட்டர் அகலமும் கொண்டது.

பிரதான பாலப் பணிகள் அனைத் தும் முடிவுற்ற நிலையில், தற்போது இருபுறமும் அணுகுசாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அனைத்துப் பணிகளும் மே 31-ம் தேதிக்குள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

திருச்சி மாநகராட்சியில் கடந்த மாதம் பெய்த தொடர் மழையால் சேதமடைந்துள்ள சாலைகளை ரூ.32 கோடியில் மேம்படுத்தும் பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

மேலும், மாவட்டத்தில் உள்ள சாலைகளை மேம்படுத்த ரூ.20 கோடிக்கு மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பணி முடிக்கப்படாமல் உள்ள மன்னார்புரம் மேம்பாலம் கட்ட தடையில்லா சான்று விரைவில் கிடைத்து விடும். ஒரு மாதத்துக்குள் இந்த பணிகள் தொடங்கும். திருச்சி மாநகருக்கு வெளியே அரை வட்ட சுற்றுச்சாலை அமைக்கும் பணிகள் மாத்தூர் முதல் துவாக்குடி வரை முடிக்கப்பட்டுள்ளன. இந்த சாலை மார்ச் மாதத்தில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். மாத்தூரிலிருந்து பஞ்சப்பூர் வரையிலான சாலைப்பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் ஓராண்டுக்குள் முடிக்கப்படும். பஞ்சப்பூர், தாயனூர் கிராமங்களில் நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

திருச்சி விமான நிலையத்தை யொட்டி செல்லும் புதுக்கோட்டை சாலையில் 110 மீட்டர் தூரத்துக்கு சுரங்கப்பாதை அமைக்க திட்டமிட்டு, அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்றார்.

இந்த ஆய்வின்போது, நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் (திட்டங்கள்) பி.நிர்மலா, உதவி கோட்டப் பொறியாளர் சு.தங்கதுரை, உதவிப் பொறியாளர் பி.அசோக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x