Published : 02 Feb 2021 03:18 AM
Last Updated : 02 Feb 2021 03:18 AM
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பத்து மாதங் களுக்குப் பிறகு மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று தொடங்கியது. இதையடுத்து, காவல் துறையின ரின் கடுமையான சோதனைக்கு பிறகே பொதுமக்கள் அனுமதிக் கப்பட்டனர்.
தமிழகத்தில் கரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், கடந்த ஆண்டு மார்ச் 24-ம் தேதி முதல் பொது முடக்கம் அறி விக்கப்பட்டது. இதையடுத்து, பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் திங்கள்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்வு கூட்டம் ரத்து செய்யப்பட்டது. பின்னர், கரோனா தொற்று பரவல் குறைய ஆரம்பித்ததும் பொதுமுடக்கம் படிப்படியாக தளர்த்தப்பட்டது.
அதன்படி, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகளை தெரிவிக்கும் வகையில் புகார் பெட்டி வைக்கப் பட்டது. மேலும், வருவாய்த்துறை சார்பில் பிர்கா வாரியாக மனுக்கள் பெறும் நிகழ்வும் நடைபெற்றது.
இந்நிலையில், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று முதல் தொடங்கியது. பத்து மாதங்களுக்குப் பிறகு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள காயிதே மில்லத் அரங்கில் மனுக்கள் பெற ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.
காவல் துறை பாதுகாப்பு
கடந்த சில நாட்களுக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கோரிக்கை மனுக்கள் அளிக்க வந்த சிலர் தீக்குளிக்கும் முயற்சி யில் ஈடுபட்டனர். இதையடுத்து, காவல் துறையினர் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. மேலும், கடுமையான சோதனை செய்த பிறகு ஆட்சியர் அலுவலகவளாகத்தில் நுழைய அனுமதிக்கப் பட்டது. தற்போது, மக்கள் குறைதீர்வு கூட்டம் தொடங்கிய நிலையில் பொதுமக்கள் அதிகளவில் வருவார்கள் என்பதால், கூடுதல் எண்ணிக்கையில் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.வாகனங்கள் உள்ளே செல்ல அனுமதிக் கவில்லை. நடந்து வந்தவர்கள் கடுமையான சோதனை செய்த பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். மேலும், முகக்கவசம் அணிந்தவர்கள் மட்டும் மனு அளிக்க உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். சமூக இடைவெளியுடன் மனுக்கள் பெறும் நிகழ்வு நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டனர். மொத்தம் 263 மனுக்கள் பெறப்பட்டன.
இளைஞர் மனு
கடந்த சில நாட்களுக்கு முன்பு அணைக்கட்டு சாலை பகுதியில் ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் என்மீது மோதியதில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறேன்.
இதற்கிடையில், விபத்து குறித்து அணைக்கட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். அதில், என் மீது மோதிய வாகனத்தின் மீது வழக்கை பதிவு செய்யாமல், மற்றொரு வாகனத்தின் மீது மோசடியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். விபத்தை ஏற்படுத்திய வாகனத்தின் உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT