Published : 31 Jan 2021 03:15 AM
Last Updated : 31 Jan 2021 03:15 AM
திருச்சி மத்திய மாவட்ட திமுக வழக்கறிஞர்கள் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தில்லைநகரில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு பேசியதாவது:
வரக்கூடிய சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவின் வெற்றியை தடுக்க சிலர் முயற்சி செய்யலாம். அதைத் தடுக்க வேண்டிய பொறுப்பு வழக்கறிஞர் அணிக்கு உள்ளது. இந்தத் தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்டவர்களும், மாற்றுத்திறனாளிகளும் வீட்டிலிருந்தே தபால் வாக்கு அளிக்கலாம் என்பதால், அவர்கள் குறித்த விவரங்களைச் சேகரித்து பட்டியல் தயாரிக்க வேண்டும்.
கடந்த தேர்தலில் திமுக தோல்விக்கு 16 தொகுதிகள் முக்கிய காரணம். இவற்றில் சில இடங்களில் 500 ஓட்டுக ளில்தான் தோல்வியுற்றோம். எனவே இம்முறை ஒவ்வொரு வாக்கும் முக்கியத் துவம் வாய்ந்ததாக கருத வேண்டும். வீடு, வீடாகச் சென்று திண்ணைப் பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும் என்றார்.
இக்கூட்டத்தில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் க.வைரமணி, மாநகரச் செயலாளர் மு.அன்பழகன், வழக்கறிஞர் அணி அமைப்பாளர் ஓம்பிரகாஷ், மாநகர அமைப்பாளர் பாஸ்கர், துணை அமைப்பாளர்கள் கவியரசன், அந்தோனிராஜ், மோகன், சவரிமுத்து, தமிழரசன் உட்பட பலர் கலந்து கொண் டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT