Published : 30 Jan 2021 03:16 AM
Last Updated : 30 Jan 2021 03:16 AM
திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வாழையில் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க திருநங்கைகளுக்கு 2 நாட்கள் பயிற்சி முகாம் நடத்தப் பட்டது.
ஜன.27-ம் தேதி தொடங்கிய பயிற்சி முகாமை, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழக துணை இயக்குநர் ஜெனரல் (தோட்டக்கலை) அனந்தகுமார் சிங் காணொலி மூலமாக தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசும் போது, “தொழில்நுட்பங்கள் கடைக் கோடி யில் உள்ள ஒவ்வொருவரை யும் சென்றடைவதே உண்மை யான அறிவியலின் பயன்பாடு. அந்தவகையில் இதுவரை திருநங் கைகளுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது குறித்து பேசி வந்தாலும், வாழை விவசாயத்தில் உள்ள தொழில்நுட்பங்கள் எப்படி அவர்களுக்கு ஒரு வாழ்வா தாரத்தை அளிக்கும் என்ற வகையில் இந்த பயிற்சி ஒரு முன்னோடியாக திகழும்” என்றார்.
இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக உதவி இயக்குநர் ஜெனரல் (தோட்டக்கலை) பாண்டே பேசும் போது, “திருநங்கைகள் இன்னும் சமுதாயத்தில் ஒரு நிறைவான இடத்தை அடைவதற்கு அவர் களது பொருளாதார நிலையை உயர்த்தும் வகையில் எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த முயற்சி வெற்றி பெற வேண்டும்” என்றார்.
விழாவுக்கு தலைமை வகித்து தேசிய வாழை ஆராய்ச்சி மைய இயக்குநர் எஸ்.உமா பேசியது: இந்த மையம் பல்வேறுபட்ட தொழில்நுட்பங்களை உருவாக்கி வாழை விவசாயத்துக்கும், முன் னேற்றத்துக்குமான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.
திருநங்கைகளுக்கான இந்த திட்டம் மையத்தின் புதிய முயற்சி. இதன் தொடர்ச்சியாக வேளாண் தொழில் மையம் மூலம் திருநங்கைகளை தொழில் கள் தொடங்கச் செய்து, உற்பத்தி ஆர்வலர் குழுக்களாக மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள உள்ளோம் என்றார்.
தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானிகள் பாக்கியராணி, ஷிவா, ராமஜெயம், சுரேஷ்குமார், கற்பகம் ஆகியோர் வாழைப் பூவிலிருந்து ஊறுகாய், கொழுப்பு குறைந்த சிப்ஸ், தண்டிலிருந்து ஜூஸ் எடுப்பதற்கான தொழில்நுட்பங்கள், அலங்கார வாழை மற்றும் கன்று உற்பத்தியில் புதிய நர்சரி தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சியளித்தனர்.
2-வது நாளாக நேற்று முன் தினம் நடைபெற்ற பயிற்சி நிறைவு விழாவில், அகில இந்திய வானொலி நிலைய இயக்குநர் நடராஜன், இந்திய அறிவியல் கண்காணிப்பு நிறுவன இயக்குநர் ராஜன் ஆகியோர் பயிற்சி முடித்த வர்களுக்கு சான்றிதழ்களை வழங் கினர்.
பயிற்சி அனுபவங்களை திருநங்கை கஜோல் பகிர்ந்து கொண்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT