Published : 30 Jan 2021 03:16 AM
Last Updated : 30 Jan 2021 03:16 AM
திருச்சி வயலூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தைப்பூசத் திரு விழாவையொட்டி சுப்பிரமணிய சுவாமியுடன் 5 கிராமங்களைச் சேர்ந்த சுவாமிகள் சங்கமிக்கும் நிகழ்ச்சி சோமரசம்பேட்டையில் நேற்று நடைபெற்றது.
இக்கோயிலில் தைப்பூசத் திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் தீர்த்தவாரி நடைபெற் றது. நேற்று காலை சுப்பிரமணிய சுவாமி வடகாபுத்தூரிலிருந்து புறப்பட்டு, உய்யக்கொண்டான் திருமலை உஜ்ஜீவநாதசுவாமி, உறையூர் பெருமாள் சுவாமி, அல்லித்துறை பார்வதீஸ்வரர், சோழங்கநல்லூர் காசிவிஸ்வநாத சுவாமி, முத்துமாரியம்மன் ஆகி யோருடன் சோமரசம்பேட்டையில் சங்கமிக்கும் நிகழ்ச்சி நடைபெற் றது.
தொடர்ந்து, அனைத்து சுவாமி களும் சோமரசம்பேட்டையில் நான்கு வீதிகளை வலம் வந்து தைப்பூச மண்டபத்தை அடைந்தன. அங்கு பக்தர்கள் தரிசனம் முடித்த பிறகு இரவு 7.30 மணியளவில் அந்தந்த கிராம கோயில்களுக்கு சுவாமிகள் புறப்பட்டுச் சென்றன.
இந்த நிகழ்ச்சியில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT