Published : 30 Jan 2021 03:16 AM
Last Updated : 30 Jan 2021 03:16 AM
திருச்சி, புதுகை, கரூர், பெரம் பலூர், அரியலூரில் நேற்று தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப் பாட்டம் நடத்தினர்.
அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும். கால முறை ஊதியம் வழங்க வேண்டும். அகவிலைப்படியுடன் கூடிய முறையான ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வுபெறும் அங்கன் வாடி ஊழியர், உதவியாளருக்கு உரிய பணிக்கொடை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை தமிழ் நாடு அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்தக் கோரிக்கைகளை நிறை வேற்ற வலியுறுத்தி ஜன.20, 21-ல் வட்டார அளவில் மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட இந்தச் சங்கத்தினர், ஜன.29-ம் தேதி மாநிலம் முழுவதும் ஆட்சியர் அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்தனர்.
அதன்படி, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சித்ரா, பொருளாளர் ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், சிஐடியு மாவட்டச் செயலாளர் ரங்கராஜன், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் பழனிசாமி ஆகியோர் கோரிக் கைகளை விளக்கிப் பேசினர். இந்தப் போராட்டத்தில் அங்கன் வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் 500-க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.
போராட்டம் குறித்து அவர் கள் கூறும்போது, “எங்கள் கோரிக்கைகளை அரசு உடனே நிறைவேற்ற வேண்டும். இல்லை யெனில், பிப்.5-ம் தேதி சென்னை தலைமைச் செயலகம் முன் கோரிக்கைகள் நிறைவேற்றப் படும் வரை காத்திருப்புப் போராட் டத்தில் ஈடுபட முடிவு செய்யப் பட்டுள்ளது” என்றனர்.
புதுக்கோட்டையில்...
புதுக்கோட்டை ஆட்சியர் அலு வலகம் அருகே அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியா ளர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் வட்டார செயலாளர் எஸ்.மகேஸ்வரி தலைமை வகித்தார். மாநில பொருளாளர் எஸ்.தேவமணி, சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.தர், அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்ட துணைத் தலைவர்கள் சந்திரா, எஸ்.தனலட்சுமி உள்ளிட்டோர் பேசினர்.
கரூரில்...
கரூர் மாவட்ட தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.சாந்தி தலைமையில் கரூர் ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் சுப்பிரமணியன், தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க மாநில பொதுச் செயலாளர் பொன்.ஜெயராம், சிஐடியு மாவட்டத் தலைவர் ஜி.ஜீவானந்தம், மாவட்டச் செய லாளர் சி.முருகேசன், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட துணைத் தலைவர் சுசீலா, சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் பி.பாலகிருஷ்ணன் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
பெரம்பலூரில்...
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாநில துணைத் தலைவர் மணிமேகலை தலைமை வகித்தார்.
அரியலூரில்...
அரியலூர் அண்ணா சிலை அருகே அரியலூர் மாவட்ட அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப் பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட் டத்துக்கு, சங்கத்தின் மாநில இணைச் செயலாளர் லதா தலைமை வகித்தார். இதில், சங்க பொறுப்பாளர்கள் மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள், உதவி யாளர்கள் கலந்துகொண்டனர்.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT