Published : 30 Jan 2021 03:16 AM
Last Updated : 30 Jan 2021 03:16 AM

திமுக ஆட்சிக்கு வந்ததும் காட்பாடியில் மற்றொரு ரயில்வே மேம்பாலம் திமுக பொது செயலாளர் துரைமுருகன் உறுதி

காட்பாடியில் சீரமைக்கப்படவுள்ள ரயில்வே மேம்பாலத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த்.படம்:வி.எம்.மணிநாதன்.

வேலூர்

நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் காட்பாடி யில் மற்றொரு ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும் என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்தார்.

காட்பாடி ரயில்வே மேம்பாலம் சீரமைப்புப் பணிகள் குறித்தும், விஐடி பல்கலைக்கழகம் அருகே கட்டப்பட்டு வரும் விளையாட்டு வளாகம் கட்டு மானப் பணிகளையும் திமுக பொதுச் செயலாளரும் காட்பாடி சட்டப்பேரவை உறுப்பினருமான துரை முருகன் மற்றும் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.

அப்போது, செய்தியாளர்கள் சந்திப் பில் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் கூறும்போது, ‘‘கடந்த 1996-ம் ஆண்டு திமுக ஆட்சியில் இந்த பாலம் கொண்டு வரப்பட்டது. கனரக வாகனங் கள் அதிகம் சென்றதால் பாலம் பலவீன மடைந்தது. நான், நாடாளுமன்ற உறுப்பி னராக தேர்வானதும் முதல் வேலையாக இந்த பாலத்தை பலப்படுத்த ரயில்வே நிர்வாகத்திடம் இருந்து நிதி பெற்று ரூ.2.50 கோடியில் பணிகள் நடைபெற் றன. பாலத்தின் மீதுள்ள சாலை பழுதடைந்துள்ளது. இதை, நெடுஞ்சாலை துறை சரி செய்ய வேண்டும்.

இது தொடர்பாக ரயில்வே நிர்வாகம், நெடுஞ்சாலைத் துறை, காவல் துறையுடன் இணைந்து ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது, பாலத்தின் இணைப்புப் பகுதியை ரயில்வே நிர்வாகமும் அதன் மீது உள்ள தார்ச்சாலையை நெடுஞ்சாலைதுறையும் இணைந்து மேற்கொள்ள முடிவானது. பாலத்தின் இணைப்பு பகுதியை பலப்படுத்தும் பணியை முடிக்க ஒரு மாதமாகும். அதுவரை போக்குவரத்தை மாற்றம் செய்ய காவல் துறை நடவடிக்கை எடுக்கவுள்ளனர். அதேபோல், இங்கு புதிய பாலம் அமைப்பது தொடர்பாக ரயில்வே, நெடுஞ்சாலைத் துறையினர் இணைந்து புதிய திட்டத்தை வடிவமைத்துள்ளனர்’’ என்றார்.

தொடர்ந்து, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் கூறும்போது, ‘‘பாலத்தை இணைப்பதற்கான பிளேட் தயாராக இருப்பதாக ரயில்வே நிர் வாகம் தெரிவித்துள்ளது. மாநில அரசு தாமதம் செய்யக்கூடாது என்பதால் மாவட்ட ஆட்சியரை நானே தொடர்பு கொண்டு பேசினேன். இன்னும் ஒரு வாரத்தில் பணிகளை தொடங்குமாறு தெரிவித்துள்ளேன்.

இந்த சாலை ஆந்திர மாநிலத்துக்கு செல்லும் முக்கியமானது என்பதால், அம்மாநில அரசுக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக எங்கள் ஆட்சி இருந்திருந்தால் இங்கு மற்றொரு பாலம் வந்திருக்கும். நான்கு மாதத்தில் நாங்கள் வந்ததும் இங்கு பாலம் வரும். காட்பாடியில் கட்டப்பட்டு வரும் விளையாட்டரங்கத்தை இன்னும் அழகுபடுத்த வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x