Published : 29 Jan 2021 03:15 AM
Last Updated : 29 Jan 2021 03:15 AM
பாளையங்கோட்டையில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழிகள் மூடப்படாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பாளையங்கோட்டை மனகாவ லம் பிள்ளை நகர் அம்பேத்கர் காலனியில் பாதாள சாக்கடை அமைக்க தோண்டப்பட்ட குழிகள் மூடப்படவில்லை. இதனால் சமீபத்தில் பெய்த மழையின்போது குழிகளில் தண்ணீர் தேங்கி, சகதியாக மாறியது. பொதுமக்கள் வெளியே நடமாட முடியாத சூழல் உருவானது. அப்பகுதியில் கழிவுநீர் தொட்டிகளும் மூடப்படாமல் இருப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் ஆதித்தமிழர் கட்சி மாவட்டச் செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் அப்பகுதியை சேர்ந்தவர்கள் பாளையங்கோட்டை- திருச்செந் தூர் சாலையில் நேற்று திடீரென்று மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாநகராட்சி அதிகாரிகளும், போலீஸாரும் அங்குவந்து போராட்டத்தில் ஈடுபட்டவர் களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். சீரமைப்பு பணிகள் உடனே தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT