Published : 29 Jan 2021 03:15 AM
Last Updated : 29 Jan 2021 03:15 AM
தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் வீ.ப. ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாநகராட்சியில் பொதுமக்களின் குறைகளை தீர்க்க ஏதுவாக, பொதுமக்களை நேரில் சந்திக்கும் முகாம் அந்தந்த மண்டல அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
இன்று (ஜன.29) பகல் 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கிழக்கு மண்டலத்துக்கு உட்பட்ட 14, 15, 16 மற்றும் 19 முதல் 33-வது வார்டு வரை மாநகராட்சி பழைய அலுவலகத்தில் வைத்தும், பிற்பகல் 3 மணி முதல் 5 மணி வரை வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட 1-வது வாா்டு முதல் 13-வது வாா்டு மற்றும் 17, 18-வது வார்டு பகுதி மக்களிடம் ஸ்டேட் பாங்க் காலனியில் உள்ள வடக்கு மண்டல அலுவலகத்தில் வைத்தும் குறைகள் கேட்கப்படும்.
இதேபோல், நாளை (ஜன.30) சனிக்கிழமை முற்பகல் 11 மணி முதல் 1 மணி வரை மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட 34-வது வார்டு முதல் 47-வது வார்டு வரையிலான பகுதி மக்களிடம் மில்லர்புரத்தில் உள்ள மேற்கு மண்டல அலுவலகத்தில் வைத்தும், பிற்பகல் 3 மணி முதல் 5 மணி வரை தெற்கு மண்டலத்துக்கு உட்பட்ட 48-வது வார்டு முதல் 60-வது வார்டு வரை உள்ள பகுதி மக்களிடம் முத்தையாபுரம் ஜே.எஸ். நகரில் உள்ள தெற்கு மண்டல அலுவலகத்தில் வைத்தும் குறைகள் கேட்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment