Published : 28 Jan 2021 07:18 AM
Last Updated : 28 Jan 2021 07:18 AM
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந் தட்டை வட்டம் அரசலூர் கிராமத் தில் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட பாசன ஏரி உள்ளது. கடந்த 15 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழாண்டு பெய்த தொடர் மழையால் இந்த ஏரி தற்போது நிரம்பி உள்ளது. மேலும், ஏரிக்கரையை ஒட்டி ஊராட்சி சார்பாக குடிநீருக்காக வெட்டப்பட்ட கிணறு ஒன்றும் உள்ளது. அதிலும் நிகழாண்டு அதிக அளவில் தண்ணீர் ஊற் றெடுத்துள்ளது.
இந்நிலையில், ஏரியின் கரை யில் ஒரு பகுதி அண்மையில் வலுவிழந்து காணப்பட்டது. இதுகு றித்து கடந்த ஒருமாத காலமாக அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அரசு அதிகாரிகளிடம் புகார் செய்துள்ளனர். ஆனால், அதை சரிசெய்ய எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் வலுவிழந்த ஏரிக்கரையில் நேற்று உடைப்பு ஏற்பட்டு, வெள்ளம் அருகிலுள்ள நெல், மஞ்சள் வயல்களில் புகுந்தது. இதனால், இப்பகுதியில் 300 ஏக்கர் பரப்பளவு விளைநிலங்களில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் நீரில் மூழ்கின. மேலும், விளை நிலங்கள், 15-க்கும் அதிகமான கிணறுகளில் தண்ணீருடன் அடித்துச் செல்லப்பட்ட மண் குவிந்துள்ளது. கோழி, ஆடு களும் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டன.
இதுகுறித்து தகவலறிந்து, ஏரி உடைப்பு ஏற்பட்ட பகுதியை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் தலைமையிலான பொதுப்பணித் துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் குழுவினர் பார்வையிட வந்தனர். அவர்களை அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் முற்றுகையிட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து முற்றுகை கைவிடப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT