Published : 27 Jan 2021 03:18 AM
Last Updated : 27 Jan 2021 03:18 AM
திருச்சி பெல் நிறுவனம் சார்பில் கைலாசபுரத்தில் உள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் குடியரசு தின விழா நேற்று கொண்டாடப்பட்டது.
பெல் திருச்சி பொது மேலாளரும், தலைவருமான டி.எஸ்.முரளி, தேசியக் கொடியேற்றி வைத்து, பெல் பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர், சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு பதக்கங் கள், கரோனா பரவல் தடுப்புப் பணியில் ஈடுபட்டவர்களுக்கு விருதுகளை வழங் கினார்.
தொடர்ந்து, டி.எஸ்.முரளி பேசியது:
2021-ம் ஆண்டில் கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் தனது தீர்க்கமான நடவடிக்கைகள் மூலம் பெல் நிறுவனம் பயன்படுத்திக் கொள்ளும். தற்சார்பு இந்தியா திட்டத்தை ஆதரிக்கும் வகையில், புதிய தயாரிப்புகளை மேம்படுத்த டெல்லியில் உள்ள பெல் தலைமை அலுவலகத்தில் வணிக மேம்பாட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
பெல் குழுமத்தின் எதிர்கால திட்டங்களுக்கேற்ப திருச்சி பிரிவில் பல்வேறு முனைப்புகள் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன. பெல் நிறுவனத்தின் புதிய முயற்சிகள் வெற்றி பெறுவதற்கு ஊழியர்களின் முழுஅர்ப்பணிப்பு மற்றும் ஈடுபாடு அவசியம். பெல் குழுமம் தனது இலக்கை எட்டுவதற்கு திருச்சி பிரிவு முக்கிய பங்கு வகிக்கும். சமூகப் பொறுப்புணர்வுத் திட்டங்கள் மூலம் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயலாற்றி வரும் பெல் நிறுவனம், மாசு கட்டுப்பாட்டு முயற்சிகளில் முன்னணி வகித்து வருகிறது என்றார்.
பெல், சிறப்பு பள்ளி மற்றும் மாற்றுத் திறன் குழந்தைகளுக்கான தொழில்பயிற்சி மையமான அறிவாலயத்தில், அதன் புரவலர் டி.சவும்யா முரளி தேசியக் கொடியேற்றினார்.
பெல் வெளி தயாரிப்புகள் துறையின் பொது மேலாளரும், அறிவாலயம் பள்ளித் தலைவருமான கே.நாகராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதேபோல, திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழக (என்ஐடி) வளாகத்தில் அதன் இயக்குநர் மினிஷாஜி தாமஸ், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் ப.மணிசங்கர், திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலக வளாகத்தில் கோட்ட மேலாளர் அஜய்குமார் ஆகியோர் தேசியக் கொடி ஏற்றினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT