Published : 26 Jan 2021 03:18 AM
Last Updated : 26 Jan 2021 03:18 AM
நிகழ்ச்சிக்கு முதல்வர் இளங்கோவன் தலைமை வகித்தார். துணை முதல்வர் எழிலரசன் முன்னிலை வகித்தார். முதலாம் ஆண்டில் சேர்ந்துள்ள 100 மாணவர்களுக்கு மூத்த மாணவர்கள் வரவேற்பு அளித்தனர். வெளி மாநிலத்தில் இருந்து 15 மாணவர்கள், 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் சேர்ந்த 6 மாணவர்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வந்த 79 மாணவர்களுக்கும் முதலாம் ஆண்டுக்கான புத்தகங்கள் வழங்கப்பட்டன.
முதல்வர் இளங்கோவன் பேசுகையில், தமிழகத்தில் தேனி அரசு மருத்துவக் கல்லூரியில்தான் முதன்முதலில் உடற்கூறியல் ஆய்வகம் அமைக்கப்பட்டது. மத்திய அரசின் பிளாட்டினம் விருதைப் பெற்றுள்ளோம். கரோனா காலத்தில் டயாலிசிஸ் செய்வதற்கு தனியார் மருத்துவமனைகள் முன்வராத நிலையில், நமது மருத்துவமனையில்தான் அதிக அளவு டயாலிசிஸ் சிகிச்சையும், 100-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்குப் பிரசவமும் பார்க்கப்பட்டது என்றார். பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT