Published : 26 Jan 2021 03:18 AM
Last Updated : 26 Jan 2021 03:18 AM

9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகள் தொடங்க அரசு ஆலோசனை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

ஈரோடு

9-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்புகள் தொடங்குவது தொடர்பாக கல்வியாளர்கள், பெற்றோருடன் பேசிக் கொண்டு இருப்பதாக, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஈரோட்டில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் பங்கேற்ற மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதாகக் கூறுவது தவறானது. இரு ஆசிரியர்களுக்கு மட்டும் கரோனா பாதிப்பு உள்ளதா என ஆய்வு நடந்தது. அவர்களுக்கும் தொற்று இல்லை.

கடந்த 2013, 2014 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் ஆசிரியர் தேர்வாணையம் மூலம் 82 ஆயிரம் பேர் தேர்vவு செய்யப்பட்டுள்ளனர். உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, அவர்களுக்கு பணியிடங்கள் வழங்கப்பப்படும். உடற்கல்வி ஆசிரியர் காலிப்பணியிடம் குறித்து இம்மாத இறுதியில் அட்டவணை வெளியிடப்படும். அதற்கேற்ப பணியிடங்கள் நிரப்பப்படும்.

9- ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்புகள் தொடங்குவது தொடர்பாக கல்வியாளர்கள், பெற்றோருடன் பேசிக் கொண்டு இருக்கிறோம். இதுகுறித்து முதல்வர் முடிவு எடுப்பார், என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x