Published : 24 Jan 2021 03:17 AM
Last Updated : 24 Jan 2021 03:17 AM
‘நிவர்’ புயல் பாதிப்பு விவரங்கள் குறித்து விழுப்புரம் மாவட்டத்தில் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் நேற்று ஆய்வு மேற் கொண்டனர்.
‘நிவர்' புயலால் பெய்த பலத்த மழையால் 646 ஹெக்டேர் நெல், 868 ஹெக்டேர் உளுந்து, 35 ஹெக்டேர் மணிலா, 77.6 ஹெக்டேர் கரும்பு ஆக மொத்தம் 1,626.6 ஹெக்டேர் அளவிலான வேளாண் பயிர்கள் சேதம் அடைந்தன.
இதேபோல் தோட்டக்கலை பயிர்களான வாழை, மரவள்ளி, பப்பாளி, தர்பூசணி, கத்திரி, வெண்டை, மிளகாய், பாகற்காய், புடலங்காய் மற்றும் பூ வகைகளான சாமந்தி, கோழிக்கொண்டை, சம் பங்கி என 323.83 ஹெக்டேர் பயிர் களும் சேதமடைந்தன. இதுதவிர 1,024 வீடுகளும் சேதமடைந்தன.
இச்சேதங்களை கடந்த டிசம்பர் 7-ம் தேதி உள்துறை அமைச்சகத் தின் இணை செயலாளர் அஷ்டோஷ் அக்னி ஹோத்ரி தலை மையில் தலைமையிலான மத்தியகுழுவினர் ஆய்வு மேற்கொண் டனர். தமிழக வேளாண் துறை முதன்மை செயலாளர் ககன்தீப் சிங்பேடியும் இந்த ஆய்வில் பங்கேற் றார்.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் ‘நிவர்’ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய கூடுதல் செயலாளர் திருப்புகழ், இணை ஆலோசகர் பவன் குமார் சிங் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வில் கலிஞ்சிக்குப்பம் கிராமத்தில் ‘நிவர்’ புயலால் சேதமடைந்த வாழை மரங்கள், சொரப் பூர் கிராமத்தில் சேதமடைந்த நெற்பயிர்கள், வீராணம் கிரா மத்தில் பாதிக்கப்பட்ட மலட் டாறு ஆற்றங்கரை பகுதி மற்றும் விழுப்புரம் தாமரைக்குளம் பகுதி யில் மழைநீர் தேங்கியுள்ள பகுதி களை ஆய்வு செய்தனர்.
பின்னர் ஆட்சியர் அலுவலககூட்டரங்கில் ‘நிவர்’ புயல் பாதிப்புகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆட்சியர் அண்ணாதுரை பாதிப்புகள் குறித்து மத்தியகுழுவினரிடம் எடுத்துரைத்தார்.
மேலும், பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலுவலர்களிடம் பயிர்ச் சேதம், சாலைகளின் சேதம், மின்மாற்றிகள் மற்றும் தெரு விளக்குகளின் சேதம், மீன்பிடி படகுகள் மற்றும் வலைகளின் சேதம், கால்நடை உயிரிழப்புகளின் சேதம், வீடுகளின் சேதம் மற்றும் ஏரி மற்றும் ஆறுகளினால் ஏற்பட் வெள்ள பாதிப்புகள் குறித்து விவரங்களை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய கூடுதல்செயலாளர் திருப்புகழ் துறைவாரியாக கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராதாகிருஷ்ணன், கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா பி சிங்,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மகேந்திரன், திண்டிவனம் சார் ஆட்சியர் அனு மற்றும் பல்வேறு துறைகளை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
‘நிவர்’ புயல் பாதிப்பு கடந்த நவம்பர் இறுதியில் ஏற்பட்டது. ஏறக்குறைய இரு மாதங்களுக்குப் பின் தற்போது தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவினர் ஆய்வு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT