Published : 24 Jan 2021 03:18 AM
Last Updated : 24 Jan 2021 03:18 AM

ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவில் திருச்சியிலிருந்து திரளானோர் பங்கேற்க முடிவு

திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் நேற்று பேசுகிறார் மாவட்டச் செயலாளர் ப.குமார். உடன் எம்எல்ஏ சந்திரசேகர் உள்ளிட்ட நிர்வாகிகள்.

திருச்சி

அதிமுக திருச்சி தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சுப்பிரமணியபுரத்திலுள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

அவைத்தலைவர் பர்வீன் கனி வரவேற்றார். எம்எல்ஏ சந்திரசேகர் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்பி.யு மான ப.குமார் தலைமை வகித்தார்.

இதில், ஜன.27-ம் தேதியில் சென்னையில் நடைபெற உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதா வின் நினைவிட திறப்பு விழாவில் திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் பல ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்பது, தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட திருவெறும்பூர், லால்குடி, மணப்பாறை தொகுதிகளில் தீவிர களப்பணியாற்றி மீண்டும் அதிமுக ஆட்சி அமைய பாடுபடுவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் ராஜ்மோகன், முன்னாள் எம்எல்ஏ பாலன், ஒன்றியச் செயலாளர்கள் அசோகன், சிவக்குமார், ராவணன், கும்பக்குடி கோவிந்தராஜ், பகுதி செயலாளர்கள் பாலு, பாஸ்கர், ஜெ. பேரவை செயலாளர் டி.டி.கிருஷ்ணன், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சுரேஷ்குமார் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x