Published : 24 Jan 2021 03:18 AM
Last Updated : 24 Jan 2021 03:18 AM

மக்கள் பிரச்சினைக்காக மனு அளித்த மாற்றுத்திறனாளி மீது தாக்குதல் ஊராட்சி செயலாளர் உட்பட 5 பேர் கைது

திருச்சி

திருச்சி மாவட்டம் முசிறி அருகேயுள்ள சூரம்பட்டி மேற்குத் தெருவைச் சேர்ந்த துரைசாமி மகன் ராமச்சந்திரன்(36). மாற்றுத் திறனாளியான இவர், சமூகப் பிரச்சினைகளுக்காக அரசுக்கும், அதிகாரிகளுக்கும் மனு அளிப்பது வழக்கம். இதன்காரணமாக சூரம்பட்டி ஊராட்சித் தலைவர் கோடி(42) என்பவருக்கும், ராமச்சந்திரனுக்கும் இடையே விரோதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் சூரம்பட்டி பாம்பாலம்மன் கோயில் அருகே நின்று கொண்டிருந்த ராமச்சந்திரனை அங்கு வந்த ஒரு கும்பல் தாக்கி அரிவாளால் வெட் டியது. இதில் படுகாயமடைந்த ராமச்சந்திரனை அக்கம்பக் கத்தினர் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் முசிறி போலீஸார் வழக்கு பதிவு செய்து சேருகுடி கிராமத்தைச் சேர்ந்த அரவிந்தன்(32), சூரம்பட்டி ஊராட்சி செயலாளர் கண்ணன்(44), மதிவாணன்(41), பாலாஜி(42), மோகன்(23) ஆகியோரை நேற்று கைது செய்தனர்.

வழக்கில் தொடர்புடைய ஊராட்சித் தலைவர் கோடியைத் தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x