Published : 22 Jan 2021 03:19 AM
Last Updated : 22 Jan 2021 03:19 AM
தென்காசியில் மாவட்ட பாஜக சார்பில் தென்காசி சட்டப் பேரவை தொகுதிக்குட்பட்ட சக்தி கேந்திர தலைவர்கள், மண்டல் பிரபாரிகள், மாவட்ட அணி மற்றும் பிரிவு தலைவர்கள், மாநில நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
ஒரு வாக்குச்சாவடிக்கு குறைந்தபட்சம் 50 இடங்களில் தாமரை சின்னம் வரைவது, 30 பேர் கொண்ட பூத் கமிட்டி அமைப்பது, உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்துவது எனக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்துக்கு கட்சியின் மாவட்டத் தலைவர் மு.ராமராஜா தலைமை வகித்தார்.
மாவட்ட பார்வையாளர் சி.டி. சோலையப்பன், தொகுதி அமைப்பாளர் கே.ஏ. ராஜேஷ் ராஜா, தொகுதி பார்வையாளர் சி. பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், கன்னியாகுமரி கோட்டப் பொறுப்பாளர் நயினார் நாகேந்திரன், இணை அமைப்புச் செயலாளர் கிருஷ்ணன், மாவட்ட பொதுச்செயலாளர் முத்துலட்சுமி, பொருளாளர் ராமநாதன் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT