Published : 21 Jan 2021 03:15 AM
Last Updated : 21 Jan 2021 03:15 AM
திருச்சி மத்திய மண்டலத்தில் கரோனாவுக்கு சிகிச்சை பெறு வோர் எண்ணிக்கை 500-க்கும் கீழ் குறைந்தது.
திருச்சியில் 12 பேருக்கும், தஞ்சாவூரில் 18 பேருக்கும், திருவாரூரில் 11 பேருக்கும், நாகையில் 3 பேருக்கும், புதுக் கோட்டையில் 4 பேருக்கும், கரூரில் 8 பேருக்கும் அரியலூரில் 2 பேருக்கும் புதிதாக கரோனா வைரஸ் தொற்று நேற்று ஏற்பட்டுள்ளது.
கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் திருச்சியில் 12, அரியலூரில் 2, கரூரில் 8, திருவாரூரில் 9, தஞ்சாவூரில் 22, புதுக்கோட்டையில் 9, நாகையில் 16 என 78 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர்.
நாகையில் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
கரோனாவால் பாதிக்கப்படு வோரின் எண்ணிக்கை தொடர்ந்து வெகுவாக குறைந்து வருவதால், திருச்சி மத்திய மண்டலத்தில் நேற்று நிலவரப்படி சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 500-க்கும் கீழ் குறைந்துள்ளது. அதன்படி, அரியலூரில் 7, கரூரில் 57, நாகையில் 53, பெரம்பலூரில் 1, புதுக்கோட்டையில் 38, தஞ்சாவூரில் 171, திருச்சியில் 109, திருவாரூரில் 55 என 491 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT