Published : 21 Jan 2021 03:15 AM
Last Updated : 21 Jan 2021 03:15 AM
தமிழ்நாடு கள் இயக்க ஒருங் கிணைப்பாளர் செ.நல்லசாமி திருச்சியில் நேற்று செய்தியாளர் களிடம் கூறியது:
தமிழகத்தில் கள் இறக்க அனுமதி கோரி சென்னை ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் இருந்து தெற்கூவம் ஆற்றுச் சாலை வரை ஜன.21-ல்(இன்று) அஸ்வமேத யாத்திரை நடத்தப்படும்.
கள் இறக்க ஆதரவு தரும் கட்சிக்கே தேர்தலில் வாக்களிப்போம். தமிழகத்தில் கள்ளுக்கான தடையை நீக்காவிட்டால், 1996 சட்டப் பேரவைத் தேர்தலில் மொடக் குறிச்சி தொகுதியில் 1,033 வேட்பாளர்களை நிறுத்தியது போல, வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் நெருக்கடி கொடுப்போம் என்றார்.
நிகழ்ச்சியில் விவசாயிகள் இல.கதிரேசன், கே.சி.பழனிசாமி, மகாதானபுரம் ராஜாராம், வழக்கறிஞர் கவிதா காந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT