Published : 21 Jan 2021 03:15 AM
Last Updated : 21 Jan 2021 03:15 AM

திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளை விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் விவ சாயிகளுக்கான ‘குறைதீர்வுக் கூட்டம்’ நாளை நடைபெறும் என ஆட்சியர் சிவன் அருள் தெரிவித் துள்ளார்.

இது குறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், "திருப்பத்தூர் மாவட்டத்தில் மாதந்தோறும் விவசாயிகளின் குறைகள் மனுக்களாக பெறப்பட்டு அதற்கான தீர்வு காணப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த மாதத்துக்காக குறைதீர்வு கூட்டம் நாளை (22-ம் தேதி) 4 இடங்களில் நடைபெறவுள்ளது.

திருப்பத்தூர் மற்றும் கந்திலி ஒன்றியங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கான குறை தீர்வுக் கூட்டம் ஆதியூர் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்திலும், ஜோலார்பேட்டை, நாட்றாம்பள்ளி ஒன்றியங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கான குறைதீர்வுக்கூட்டம் நாட்றாம்பள்ளி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்திலும், ஆலங்காயம் ஒன்றியத்தைச் சேர்ந்த விவ சாயிகளுக்கான குறைதீர்வுக்கூட்டம் வாணியம்பாடி வேளாண் விரிவாக்க மையத்திலும், மாத னூர் ஒன்றியத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கான குறை தீர்வுக்கூட்டம் மாதனூர் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத் தில் நாளை காலை 10.15 மணிக்கு நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில் வேளாண், கால்நடை பராமரிப்பு, பால்வளம், பொதுப்பணி, வருவாய், மின் வாரியம், காவல் , ஊரக வளர்ச்சி, கூட்டுறவு உள்ளிட்ட அனைத்து துறையைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

எனவே, 6 ஒன்றியங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது பகுதியில் நடைபெறும் விவ சாயிகள் குறைதீர்வுக் கூட்டத்தில் பங்கேற்று தங்களது குறைகளை மனுக்களாக கொடுத்து, அதி காரிகளிடம் தேவைகள் குறித்து கேட்கலாம்’’ என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x