Published : 21 Jan 2021 03:15 AM
Last Updated : 21 Jan 2021 03:15 AM
வேலூர்/ராணிப்பேட்டை/திருப்பத்தூர்
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல்களை அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் நேற்று வெளியிட் டனர். அனைத்து தொகுதிகளிலும் ஆண் வாக்காளர்களை காட்டிலும், பெண் வாக்காளர்களே அதிக அளவில் இடம் பெற்றுள்ளனர்.
2021-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியை தகுதி நாளாக கொண்டு சிறப்பு சுருக்க திருத்த முகாம் மூலம் கடந்த ஆண்டு நவம்பர் 16-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலின் நகல் அனைத்து வாக் குச்சாவடி மையங்களில் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப் பட்டது.
இந்த பட்டியலில் இடம் பெறா தோர், பெயர் திருத்தம், முகவரி மாற்றம் ஆகியவைகளுக்காக சிறப்பு சுருக்க திருத்த முகாம் நவம் பர் 21 மற்றும் 22-ம் தேதிகளிலும், டிசம்பர் 12 மற்றும் 13-ம் தேதிகளில் நடத்தப்பட்டன. இந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்ட பொது மக்கள் படிவம்-6, 7, 8 மற்றும் படிவம் 8ஏ உள்ளிட்ட விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்கினர்.
இந்த படிவங்கள் அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்க ளால் முதற்கட்ட விசாரணைகள் நடத்தப்பட்டு, வாக்காளர் பதிவு அலுவலரால் இறுதி செய்யப்பட் டது. இதைத் தொடர்ந்து, 2021-ம்ஆண்டுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் அங்கீ கரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர்கள் நேற்று காலை வெளி யிட்டனர்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் 5 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை நேற்று காலை வெளியிட்டார். இது குறித்துசெய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் கூறும் போது, "வேலூர் மாவட்டத்தில் வேலூர், காட்பாடி, அணைக்கட்டு, கே.வி.குப்பம் (தனி), குடியாத்தம் (தனி) என 5 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இத்தொகுதி களுக்கான வாக்காளர் பட்டியல் இன்று (நேற்று) வெளியிடப்பட்டுள் ளது. அதன்படி, வேலூர் மாவட் டத்தில் 6,12,857 ஆண் வாக்காளர் களும், 6,51,091 பெண் வாக்காளர் களும், 140 மூன்றாம் பாலினத்த வர்கள் என மொத்தம் 12 லட்சத்து 64 ஆயிரத்து 88 வாக்காளர் உள்ளனர்.
23,800 பேர் புதிய வாக்காளர் களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட் டாலும் வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடத்த தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்டுள்ளோம்.
இருப்பினும், வாக்காளர் பட்டிய லில் இடம் பெறாதோர் தொடர்ந்து மனு அளிக்கலாம். ஆன்லைன் மூலமாக அதாவது, www.nvsp.in என்ற தேசிய இணையதளம் அல்லது Voter Helpline App மூலம் விண்ணப்பிக்கலாம். வேலூர் மாவட் டத்தில் உள்ள 1,301 வாக்குச்சாவடி மையங்களிலும், மாவட்ட இணைய தளத்திலும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இதை பார்த்து பொதுமக்கள் பயன் பெறலாம்’’. என்றார். நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை
இதில், இன்று (நேற்று) வெளியிடப்படும் வாக்காளர் பட்டியல்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் 5,00,626 ஆண் வாக்காளர்களும், 5,27,127 பெண் வாக்காளர்களும், 51 மூன்றாம் பாலித்தனவர் என மொத்தம் 10 லட்சத்து 27 ஆயிரத்து 804 வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இந்த பட்டியல் 584 வாக்குச்சாவடி மையங்கள், வட்டாட்சியர், நகராட்சி அலுவலகம், சார் ஆட்சியர், ஆர்டிஓ அலுவ லகங்களில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படும். இந்த பட்டியலில் இடம் பெறாதோர் தொடர்ந்து விண்ணப்பிக்கலாம்’’ என்றார். இந்நிகழ்ச்சியில், டிஆர்ஓ ஜெயச்சந்திரன், சார் ஆட்சியர் இளம்பகவத், தேர்தல் வட்டாட்சியர் ஜெயக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னி லையில் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் நேற்று வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.அப்போது, அவர் பேசும்போது, ‘‘திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் என மொத்தம் 4 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல்படி 9 லட்சத்து 38 ஆயிரத்து 692 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர்.
இதைத்தொடர்ந்து பட்டியலில் இடம் பெறாதவர்களுக்காக சிறப்பு சுருக்க திருத்த முகாம் நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, தற்போது 22,166 பேர் கூடுதலாக பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் 4,73,591 ஆண் வாக்காளர்களும், 4,87,195 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 72 பேர் என மொத்தம் 9 லட்சத்து 60 ஆயிரத்து 858 பேர் இறுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
வாக்காளர் பட்டியலில் இடம் பெற விரும்புவோர் தொடர்ந்து விண்ணப்ப படிவங்களை அளிக்கலாம். இறுதி வாக்காளர் பட்டியல் 1,030 வாக்குச்சாவடி மையங்கள், நகராட்சி, ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப் படும்’’ என்றார்.
இந்நிகழ்ச்சியில், டிஆர்ஓ தங்கைய்யாபாண்டியன், சார் ஆட்சியர் வந்தனாகர்க், ஆட்சி யரின் நேர்முக உதவியாளர் வில்சன்ராஜசேகர், ஆர்டிஓ காயத்ரிசுப்பிரமணி, துணை ஆட்சியர்கள் அப்துல்முனீர், லட்சுமி, பூங்கொடி, தேர்தல் வட்டாட்சியர் அனந்தகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment