Published : 20 Jan 2021 03:14 AM
Last Updated : 20 Jan 2021 03:14 AM
திமுக சார்பில் நடத்தப்படும் மக்கள் கிராம சபைக் கூட்டங்களில் ரேஷனில் பொருட்கள் விநியோகம் குறித்தே அதிகளவில் புகார்கள் அளிக்கப்படுவதாக திருச்சி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்எல்ஏ தெரிவித்தார்.
திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி:
திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் 156 இடங்களில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டங்களில் சுமார் 40,000 பேர் அதிமுகவை நிராகரிப்பதாகக் கூறி கையெழுத்திட்டுள்ளனர்.
மக்கள் கிராம சபையில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்களில் ரேஷனில் பொருட்கள் விநியோகம் குறித்தே அதிக புகார்கள் வந்துள்ளன.
திமுக ஆட்சிக்கு வந்ததும் அனைத்து கோரிக்கை மனுக்கள் மீதும் நட வடிக்கை எடுக்கப்படும். திருச்சி தெற்கு மாவட்ட திமுகவுக்கு உட்பட்ட திருவெறும்பூர், திருச்சி கிழக்கு, மணப்பாறை ஆகிய 3 தொகுதிகளிலும் தீவிரமாக தேர்தல் களப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தலைமை உத்தரவிட்டால், எந்த தொகுதியிலும் நிற்க நான் தயாராக இருக்கிறேன்.
சட்டப்பேரவையிலும், உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணியிடமும் நான் வலியுறுத்தி தெரிவித்த கோரிக்கையின் அடிப்படையில், திருவெறும்பூர் பகுதியில் உள்ள சாலைகளை மேம்படுத்த அரசு ரூ.30 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
சிறுகனூர் பகுதியில் திமுகவின் மாநில மாநாடுக்காக பூமிபூஜை செய்த நிகழ்வு கட்சி சார்ந்த திட்டமிட்ட நிகழ்ச்சி அல்ல. அது திமுக முதன்மைச் செய லாளர் கே.என்.நேருவின் சென்டிமென்ட். அதில் நான் பங்கேற்காததில் அரசியல் ஏதுமில்லை என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT