Published : 18 Jan 2021 03:14 AM
Last Updated : 18 Jan 2021 03:14 AM
தூத்துக்குடி மாவட்டம் தெய்வச்செயல்புரம் அருகே உள்ள பொட்டலூரணியில் பாவேந்தர் தமிழ் மன்றம் சார்பில் பொங்கல் திருவள்ளுவர் விழா நடைபெற்றது.
மன்ற செயலாளர் ஈ.சங்கரநாராயணன் தலைமை வகித்தார். மன்ற தலைவர் ப.சு.ராசா வரவேற்றார். மாணவர் அரங்கம் நிகழ்ச்சியில் திருக்குறள் ஒப்பித்தல் போட்டி, குறள் நெறிக் கதைகள் சொல்லும் போட்டி, பெருஞ்சித்திரனார் பாடல் ஒப்பித்தல் போட்டி, ஓவியப்போட்டி, கோலப் போட்டி ஆகியவை நடைபெற்றன. அண்மையில் மறைந்த தமிழ் பண்பாட்டு ஆய்வறிஞர் தொ.பரமசிவன், தனித்தமிழ் இயக்க போராளி தேன்மொழி அம்மையார், சமூக ஆர்வலர் செம்மணி, கலைமாமணி கைலாசமூர்த்தி ஆகியோரின் படத்திறப்பு நிகழ்வு நடைபெற்றது.
உலக தமிழ் கழக தலைவர் நிலவழகன், இந்திய பொதுவுடைமை (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) இயக்க மாநிலக் குழு உறுப்பினர் க.ரமேஷ், புரட்சிகர இளைஞர் முன்னணியைச் சேர்ந்த சுஜித் ஆகியோர் பேசினர்.
தமிழக அரசின் நல்லாசிரியர் விருதுபெற்ற பொட்டலூரணியைச் சேர்ந்த ஆசிரியர் கோயில்பிச்சைக்கு ஆசிரியமணி விருது வழங்கப்பட்டது. தாமிரபரணி கலைக் குழுவினரின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழாசிரியர்கள் வை.ராமசாமி, சங்கர்ராம் உட்பட பலர் பங்கேற்றனர்.
திருநெல்வேலி
வளர்தமிழ் மன்றத்தின் சார்பில் பாளையங்கோட்டையில் திருவள்ளுவர் தினவிழா நடைபெற்றது. மன்றத் தலைவர் எஸ்.ஆர்.அனந்தராமன் தலைமை வகித்தார். துணைச் செயலாளர் சு. முத்துசாமி வரவேற்றார். முன்னாள் சார்பதிவாளர் மணிலால், சாராள் தக்கர் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் ஜெயமேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மன்ற பொதுச்செயலாளர் கோ. கணபதிசுப்பிரமணியன் தொடக்க உரையாற்றினார். திருக்குறளின் பெருமைகள் குறித்து கவிஞர் பாப்பாக்குடி இரா. செல்வமணி உரையாற்றினார்.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT