Published : 17 Jan 2021 03:15 AM
Last Updated : 17 Jan 2021 03:15 AM

திருச்சி மத்திய மண்டலத்தில் 30 இடங்களில் கரோனா தடுப்பூசி இடும் பணி தொடக்கம்

திருச்சி

திருச்சி மத்திய மண்டலத்தில் முதல் கட்டமாக 30 இடங்களில் கரோனா தடுப்பூசி இடும் பணி நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று 472 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் த.பழனிகுமார் தலைமை வகித்தார். மருத்துவ மனை டீன் வனிதா முன்னிலை வகித்தார். மாவட்டத்தில் லால்குடி, ரங் கம் அரசு மருத்துவமனைகள், புத்தாநத்தம், இனாம்குளத்தூர் ஆரம்ப சுகா தார மையங்கள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை என 5 இடங்களில் கரோனா தடுப்பூசி போடப்படுகிறது.

நிகழ்ச்சியில், அரசு மருத்துவக் கல்லூரி கண்காணிப்பாளர் ஏகநாதன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடை பெற்ற பணியை ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி பார்வையிட்டார். பின்னர், அவர் கூறியபோது, ‘‘மாவட்டத்தில் முதல் கட்டமாக 4 இடங்களில் 10,199 முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டது’’ என்றார்.

நிகழ்ச்சியில், மருத்துவக் கல்லூரி முதல்வர் எம்.பூவதி, சுகாதார துணை இயக்குநர் கலைவாணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அரியலூர் மாவட்டம் கடுகூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா தடுப்பூசி வழங்கும் பணியை அரசு தலைமைக்கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியர் த.ரத்னா ஆகியோர் தொடங்கி வைத்தனர். மாவட்டத்தில் அரியலூர் அரசு தலைமை மருத்துவமனை, ஜெயங்கொண்டம் அரசு மருத்து வமனை, குமிழியம்,கடுகூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் என 4 இடங்களில் கரோனா தடுப்பூசி இடும் பணி நடைபெறுகிறது. மாவட் டத்தில், மொத்தம் 3,082 முன்களப் பணியாளர்களுக்கு கரோனா தடுப் பூசி வழங்கப்பட உள்ளது என அரசு தலைமைக் கொறடா தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், எம்எல்ஏ ஜெ.கே.என்.ராமஜெயலிங்கம், எஸ்பி ஆர்.னிவாசன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் ஹேமசந்த்காந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் எம்எல்ஏ இரா.தமிழ்ச்செல்வன் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் ப.வெங் கட பிரியா இத்திட்டத்தை நேற்று தொடங்கி வைத்தார். மாவட்டத்தில் முதல்கட்டமாக 5,100 முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் போடப் பட உள்ளது என ஆட்சியர் தெரி வித்தார். நிகழ்ச்சியில், சுகாதார பணி கள் துணை இயக்குநர் கீதாராணி, அரசு தலைமை மருத்துவமனை இருக்கை மருத்துவர் ராஜா உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி இடும் பணியை மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறும்போது, ‘‘கரூர் மாவட்டத்தில் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, குளித்தலை அரசு மருத்துவமனை, வாங்கல் மற்றும் உப்பிடமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையங்கள் என 4 இடங்களில் 11,010 முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி இடப்பட உள்ளது. இதில் முதல்கட்டமாக 3,900 பேருக்கு தடுப்பூசி இடப்படும் ’’என்றார்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி, கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ ம.கீதா, அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அசோகன், சுகாதா ரப் பணிகள் துணை இயக்குநர் சந்தோஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைகள், அடியக்கமங் கலம், பெரும்பண்ணையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் என 5 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. திரு வாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் எஸ்பி எம்.துரை தடுப்பூசி முகாமை தொடங்கி வைத் தார். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் முத்துக்குமரன் முன்னிலையில் முன்களப் பணி யாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது. நிகழ்ச்சியில், மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மருத்துவர் கீதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவ மனை, பட்டுக்கோட்டை அரசு மருத்துவ மனை, பட்டீஸ்வரம் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் கரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது. மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி போடும் பணியை ஆட்சியர் ம.கோவிந்தராவ் பார்வையிட்டார்.

நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் நாகை, மயிலாடுதுறை, சீர்காழி அரசு மருத்துவ மனைகள், ஆக்கூர் ஆரம்ப சுகாதார நிலையம் என 4 இடங்களில் நேற்று கரோனா தடுப்பூசி போடப்பட்டது. நாகை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தடுப்பூசி போடும் பணியை மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சண்முகசுந்தரம், நாகை மருத்துவக் கல்லூரி டீன் விஸ்வநாதன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.

காரைக்கால் அரசு பொது மருத்துவ மனையில் ஆட்சியர் அர்ஜூன் சர்மா கரோனா தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்தார். அப்போது, மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் சித்ரா, நலவழித் துறை துணை இயக்குநர்(பொ) டாக்டர் அன்புச் செல்வி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

472 பேருக்கு தடுப்பூசி

திருச்சி மத்திய மண்டலத்தில் நேற்று திருச்சியில் 87, திருவாரூரில் 103, தஞ்சாவூரில் 129, கரூரில் 105, புதுக்கோட்டையில் அரசு மருத்துவக் கல்லூரி டீன் எம்.பூவதி உட்பட 23, நாகையில் 10, அரியலூரில் 13, பெரம்பலூரில் சுகாதார பணிகள் துணை இயக்குநர் கீதாராணி உட்பட 2 பேர் என 472 பேர் மட்டும் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x