Published : 16 Jan 2021 03:15 AM
Last Updated : 16 Jan 2021 03:15 AM
விழுப்புரம் மாவட்டத்தில் மாட்டுபொங்கல் பண்டிகையை விவசாயிகள் உற்சாகத்துடன் கொண்டாடி னார்கள்.
மாடுகளை காலையில் குளிக்க வைத்து, புதிய கயிறு மணிகளை அணிவித்து, மாவிலை தோரணங்களை மாலையாக அணிவித்து, பட்டியில் பொங்கலிட்டு மாடுகளை வழிபட்டனர்.
ஊர் எல்லையில் உள்ள எல்லைச்சாமியான ஐய்யனாரப்பன், முனீஸ்வரன், சின்னண்ணன், பெரியண்ணன் கோயில்களில் மாடுகளை நிறுத்தி வழிபட்டனர். பின்னர் அருகில் உள்ள ஏரிகளில் உள்ள வெட்டவெளி, ஊருக்கு நடுவில் உள்ள மைதானத்தில் எருது பிடிப்பு எனப்படும் மாடுபிடி விளையாட்டை நடத்தினர்.
ரிஷிவந்தியம் ஜம்புடை கிராமத்தில் மாட்டுப் பொங்கலையொட்டி வண்டி மாடுகள், ஏர் உழவு மாடுகள் மற்றும் பசுக்களை வளர்ப்போர் காலையிலேயே அவற்றை குளிப்பாட்டி, அலங்காரம் செய்து அவற்றுக்கு உணவளித்தனர். தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட வண்டி மாடுகளையும், பசுக்களையும் வீதிகளில் உலாவரச் செய்து மகிழ்ந்தனர்.
ரிஷிவந்தியம் ஜம்புடை கிராமத்தில் 50 ஜோடி வண்டி மாடுகள் அலங்கரிக்கப்பட்டு வீதியுலா வரச் செய்தது அனை வரையும் கவர்ந்தது.
புதுச்சேரியில் பொங்கலுக்கு மறுநாளான நேற்று மாட்டுப் பொங்கல் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மாடுகள் வளர்ப்பவர்கள் மாடுகளை அலங்கரித்து, பொங்கலிட்டு வழிபட்டனர்.
பல்வேறு கிராமப் பகுதிகளில் அலங்கரித்த மாடுகளை கோயில் களுக்கு கொண்டு சென்று சிறப்பு பூஜைகள் செய்து மாடுகளை விரட்டிச் செல்லும் நிகழ்வுகள் நடைபெற்றன.
வாழை, கரும்பு போன்றவை களைக் கொண்டு மாட்டுவண்டிகள் அலங்கரிக் கப்பட்டு ஊர்வலம் நடந்தது. கருவடிக்குப்பம் ஓம்சக்தி நகரில் அமைந்துள்ள கோமாதா கோயிலில் மாட்டு பொங்கலையொட்டி நேற்று மாலை பசுக்களுக்கு காய்கறிகள், பழங்கள், அகத்திக்கீரை உள்ளிட்ட உணவுகளை அளித்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT