Published : 16 Jan 2021 03:16 AM
Last Updated : 16 Jan 2021 03:16 AM
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த பலத்த மழையால் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பிரதான அணைகளான பாபநாசம், மணிமுத்தாறு அணைகளும், தென்காசி மாவட்டத்தில் கடனா நதி, ராமநதி, குண்டாறு, கருப்பாநதி அணைகளும் நிரம்பியுள்ளன. பாபநாசம், மணிமுத்தாறு அணைகளுக்கு வரும் தண்ணீர் முழுவதும் தாமிரபரணி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
திருநெல்ேவலி மாவட்டத்தில் அணைப்பகுதிகளிலும் பிறஇடங் களிலும் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மி.மீட்டரில்):
பாபநாசம்- 68, சேர்வலாறு- 27, மணிமுத்தாறு- 62, நம்பியாறு- 13, கொடுமுடியாறு- 10, அம்பாசமுத்திரம்- 42, சேரன்மகாதேவி- 42, நாங்குநேரி- 12, ராதாபுரம்- 8, பாளையங்கோட்டை- 24, திருநெல்வேலி- 13.80.
அமைச்சர்கள் ஆய்வு
கூட்டத்தில், திருநெல்வேலி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அபூர்வா, ஆட்சியர் வே.விஷ்ணு, மாநகர காவல் ஆணையர் தீபக் தாமோர், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.பெருமாள், எம்எல்ஏக்கள் நாராயணன், எஸ்.பி.சண்முகநாதன், சின்னப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
“வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள தால் பொதுமக்கள் பாதுகாப்பு நிமித்தம் ஆற்றுக்கு சென்று குளிக்கவோ, புகைப்படம் எடுக்கவோ அனுமதி கிடையாது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மாவட்ட நிர்வாகத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு முகாம்களில் வெள்ளப்பெருக்கு தணியும்வரை தங்கியிருக்க வேண்டும்” என்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
காவல்துறை எச்சரிக்கை
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT