Published : 16 Jan 2021 03:16 AM
Last Updated : 16 Jan 2021 03:16 AM
திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயிலில் உள்ள திட்டி வாசல் வழியாக வந்து சூரிய பகவானுக்கு அண்ணாமலையார் நேற்று காட்சிக் கொடுத்தார்.
தி.மலை அண்ணாமலையார் கோயிலில், ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் 2-ம் நாளில் திருவூடல் திருவிழா நடைபெறும். அதன்படி, திருவூடல் திருவிழாவையொட்டி மூலவர் மற்றும் அம்மனுக்கு நேற்று சிறப்பு அபிஷேகம் செய்து, மகா தீபாராதனை காட்டப்பட்டது.
அதன் பின்னர், மாட்டு பொங்கலையொட்டி பெரிய நந்திக்கு பழங்கள், காய்கறிகள் மற்றும் மலர்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தன.
இதையடுத்து, பெரிய நந்திக்கும் மற்றும் திட்டி வாசல் வழியாக வெளியே வந்து, சூரியபகவானுக்கு உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார் காட்சிக் கொடுத்தார். அப்போது, அங்கு திரண்டிருந்த பக்தர்கள், அண்ணாமலையாருக்கு அரோகரா என முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.
திருவூடல் விழா
இதைத்தொடர்ந்து. திருமஞ்சன வீதியில் திருவூடல் திருவிழா நேற்று இரவு நடைபெற்றது. திருவூடல் விழா என்பது, சிவனை மட்டும் வணங்கி, அம்மனை வணங்க மறுத்து பிருங்கி மகரிஷி தவம் செய்ததால் சிவன் மற்றும் அம்மன் இடையே ஏற்படும் ஊடலை குறிக்கிறது.இதனால், அண்ணாமலையார் கோயிலுக்கு அம்மனும், குமரக் கோயிலுக்கு சிவபெருமானும் சென்றுவிட்டனர். இதையடுத்து. அவர்கள் இருவருக்கும் அண்ணாமலையார் கோயிலில் இன்று கூடல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT