Published : 13 Jan 2021 03:15 AM
Last Updated : 13 Jan 2021 03:15 AM
பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் கொண் டாடவே தமிழக அரசு பல்வேறு சலுகை களை வழங்கியுள்ளதாக அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் சுற்றுலாத்துறை சார்பில் ‘பொங்கல் திருவிழா’ நேற்று கொண் டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியை யொட்டி சுற்றுலாத்துறை சார்பில் தமிழர்களின் பாரம்பரிய கலாச்சார நிகழ்ச்சிகளான மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், பரத நாட்டியம், பொய்க்கால் குதிரை, சிலம்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தலைமை வகித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். தமிழக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி சிறப்பு விருந் தினராக கலந்துகொண்டு, பொங் கல் விழாவை தொடங்கி வைத்தார்.
முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து மாட்டு வண்டியில் அமைச்சர் கே.சி.வீரமணி, மாவட்ட ஆட்சியர் சிவன் அருள், காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் ஆகியோர் மேளதாளம் முழங்க ஊர்வலமாக வந்தனர். பிறகு, மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் நடைபெற்ற பொங்கல் விழாவில் அமைச்சர் கே.சி.வீரமணி குத்து விளக்கேற்றி கலாச்சார நிகழ்ச்சி களை தொடங்கி வைத்துப் பேசும் போது, "உழவர் பெருமையை உலகிற்கு எடுத்துக் கூறும் திருநாளாக பொங்கல் பண்டிகை ஆண்டு தோறும் தை மாதம் முதல் தேதியில் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கரோனா தொற்றால் பொங்கல் பண்டிகையை நாம் கொண்டாட முடியுமா? என்ற அச்சம் நம் எல்லோருக்கும் இருந்தது. ஆனால், கரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதால் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் மக்கள் கொண்டாட தமிழக அரசு பல்வேறு சலுகைகளை அளித் துள்ளது. மேலும், கரோனாவால் வேலை இழந்த ஏழை, எளிய மக்களுக்காக தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பும், ரூ.2,500 பணமும் வழங்கப்பட்டது.
பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும், நம் கலாச்சார நிகழ்வுகளும் இங்கு நடத்தப் பட்டன. தமிழக மக்கள் தங்கள் குடும்பத்தாருடன் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்பதே அரசின் விருப்பம்’’ என்றார்.
இந்நிகழ்ச்சியில், திருப்பத்தூர் வேளாண் இணை இயக்குநர் ராஜசேகர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர், மாவட்ட கூட்டுறவு அச்சகத்தலைவர் டி.டி.குமார், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் கே.ஜி.ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT