Published : 12 Jan 2021 03:14 AM
Last Updated : 12 Jan 2021 03:14 AM

ஜல்லிக்கட்டு காளைகளுக்கு டோக்கன் வழங்கும் அதிகாரம் வருவாய்த் துறைக்கு திடீர் மாற்றம்

மதுரை

ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் வழக் கத்துக்கு மாறாக காளைகளுக்கு டோக்கன் வழங்கும் அதிகாரம், கால்நடைத் துறையிடம் இருந்து வருவாய்த்துறைக்கு மாற்றப்பட் டுள்ளது. இந்த முறை கரோனா கட்டுப்பாடுகளால் குறைவான காளைகளை வாடிவாசலில் களம் இறக்க வாய்ப்பு இருக்கும் நிலையில் வருவாய்த்துறையினர் அதிகமான காளைகளுக்கு டோக் கன் வழங்குவதால் சிக்கல் ஏற் பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் அவனி யாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் ஆண்டுதோறும் அரசு சார்பில் நடத்தப்படுகிறது.

மாவட்ட ஆட்சியர், கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் தலைமையில் மருத்துவக் குழுவினர் போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கு பரி சோதனை செய்து டோக்கன் வழங்குவர். கடந்த ஆண்டு வரை இந்த நடைமுறைதான் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு காளைகளுக்கு மருத்துவப் பரிசோ தனை செய்து தகுதிச்சான்று வழங்கும் அதிகாரம் மட்டுமே கால்நடைத் துறையினருக்கு வழங் கப்பட்டுள்ளது.

போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கு டோக்கன் வழங்கும் அதிகாரம் வருவாய்த்துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கோட்டாட்சியர், காவல் துணைக் கண்காணிப்பாளர், கால்நடை மருத்துவ அலுவலர் ஆகியோர் கையெழுத்திட்ட டோக்கன்கள் காளைகளின் உரிமையாளர் களுக்கு வழங்கப்படுகின்றன. முன்பு கால்நடை இணை இயக்குநர், துணை இயக்குநர், கால்நடை மருத்துவ அலுவலர் ஆகியோர் கையெழுத்திட்ட டோக்கன்கள் வழங்கப்பட்டு வந்தன. ஆனால், தற்போது வருவாய்த்துறை வசம் காளைகளுக்கு டோக்கன் வழங்கும் அதிகாரம் சென்றது. இதனால் அவர்கள் விழா கமிட்டிக்கும், விஐபிகள், கட்சியினர் மற்றும் காவல்துறையினர் வளர்க்கும் காளைகளுக்கு அதிகளவு டோக்கன் வழங்கி உள்ளனர்.

அதனால், கிராமங்களில் விவசாயிகள், சாமா னியர்கள் வளர்க்கும் காளை களுக்கு டோக்கன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப் படுகிறது.

மேலும், கரோனா கட்டுப் பாடுகளால் குறைந்த எண் ணிக்கையிலான காளைகளே களம் இறக்க வாய்ப்பு இருக் கும்நிலையில், அதிகளவு டோக் கன்களை வருவாய்த் துறையினர் விநியோகம் செய்துள்ளதால் போட்டி நடக்கும் நேரத்தில் காளைகளை வாடிவாசலில் அவிழ்க்க முடியாமல் காளை உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபடவும் வாய்ப்புள்ளதாக கூறப் படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x