Published : 11 Jan 2021 03:26 AM
Last Updated : 11 Jan 2021 03:26 AM
திருநெல்வேலி மாவட்டத்தில் காவல்துறை சார்பில் நடைபெற்ற மக்கள் குறைதீர் முகாமில் 192 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் காவல்துறை சார்பில் அனைத்து உட்கோட்ட பகுதிகளிலும் மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டது. தாழையூத்து உட்கோட்டத்தில் டிஎஸ்பி அர்ச்சனா தலைமையில் நடைபெற்ற முகாமில் 36 மனுக்களுக்கும், நாங்குநேரி உட்கோட்டத்தில் டிஎஸ்பி லிசா ஸ்பிலா தெரஸ் தலைமையில் நடைபெற்ற முகாமில் 21 மனுக்களுக்கும், வள்ளியூர் உட்கோட்டத்தில் டிஎஸ்பி உதயசூரியன் தலைமையில் நடைபெற்ற முகாமில் 19 மனுக்களுக்கும், அம்பாசமுத்திரம் உட்கோட்டத்தில் டிஎஸ்பி பிரான்சிஸ் தலைமையில் நடைபெற்ற முகாமில் 11 மனுக்களுக்கும், சேரன்மகாதேவி உட்கோட்டத்தில் உதவி ஏஎஸ்பி பிரதீப் தலைமையில் நடைபெற்ற முகாமில் 52 மனுக்களுக்குமாக மொத்தம் 139 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.
இதுபோல் திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டையில் உதவி ஆணையர்கள் சதீஷ்குமார், ஜான் பிரிட்டோ ஆகியோர் தலைமையில் நடைபெற்ற முகாம்களில் 53 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT