Published : 10 Jan 2021 03:30 AM
Last Updated : 10 Jan 2021 03:30 AM
இந்து சமய அறநிலையத்துறையின் திருநெல்வேலி இணை ஆணையர் மண்டலத்தில், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருக்கோயில்கள் சார்பில், பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12- ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு திருப்பாவை, திருவெம்பாவைப் பாசுரங்களை பண்ணோடு பாடுதல் மற்றும் கட்டுரை போட்டி நெல்லையப்பர் கோயிலில் நடத்தப்பட்டது.
நடுவர்களாக பாளையங் கோட்டை மேட்டுத்திடல் காந்திமதி மேல்நிலைப்பள்ளி ஆசிரியைகள் நித்யா, முத்துசெல்வி, சுகந்தி, ஆஷாதேவி, கீதா ஆகியோரும், சுவாமி நெல்லையப்பர் அன்பு ஆசிரமத் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை முத்துலட்சுமியும் செயல்பட்டனர்.
6-ம் வகுப்பு முதல் 8 -ம் வகுப்பு முடியப் பயிலும் மாணவ,மாணவி யருக்கானப் பண்ணோடு பாடுதல் போட்டியில், பாளையங்கோட்டை மேட்டுத்திடல் காந்திமதி அம்பாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி வெயிலுகந்தாள் முதல்பரிசும், வீரவநல்லூர் செயின்ட் ஜான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சுப்புலட்சுமி 2-ம் பரிசும், திருநெல்வேலி டவுன் கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி வர்ஷிணி 3-ம் பரிசும் பெற்றனர்.
9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புக்கான பிரிவில் திருநெல் வேலி செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் ஏ. சுப்பிரமணியன் முதல்பரிசும், சங்கர்நகர் ஜெயேந்திரா கோல்டன் ஜூப்ளி பள்ளி கே.சுவாதி 2-ம் பரிசும், பாளையங்கோட்டை தூய யோவான் மேல்நிலைப்பள்ளி ஹரிஹரசுப்பிரமணியன் 3-ம் பரிசும் பெற்றனர்.
6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான கட்டுரைப் போட்டியில் திருநெல்வேலி இந்து நடுநிலைப் பள்ளி மாணவி பத்மாவதி முதல் பரிசும், திருமால் 2-ம் பரிசும், புஷ்பலதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வெண்ணிலா மூன்றாம் பரிசும் பெற்றனர்.
9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பிரிவில் காந்திமதி அம்பாள் மேல்நிலைப் பள்ளி மாணவி இசக்கியம்மாள் முதல் பரிசும், சேரன்மகாதேவி முஸ்லீம் கமிட்டி உயர் நிலைப்பள்ளி முப்பிடாதி 2-ம் பரிசும், காந்திமதி அம்பாள் மேல்நிலைப் பள்ளி மாணவி ஆர்த்தி 3-ம் பரிசும் பெற்றனர். போட்டி ஏற்பாடுகளை செயல் அலுவலர் ராமராஜா மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT