Published : 09 Jan 2021 03:12 AM
Last Updated : 09 Jan 2021 03:12 AM

சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் அம்மா மினி கிளினிக் திறக்காவிட்டால் போராட்டம் ஒன்றிய குழு தலைவர் எச்சரிக்கை

சேத்துப்பட்டில் நேற்று நடைபெற்ற ஒன்றியக்குழு கூட்டத்தில் பேசும் தலைவர் ராணி அர்ஜுனன். அருகில், துணை தலைவர் முருகையன் உள்ளிட்டோர்.

திருவண்ணாமலை

சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 3 கிரா மங்களில் அம்மா மினி கிளினிக் திறக்கவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் என ஒன்றியக் குழுத் தலைவர் ராணி அர்ஜுனன் எச்சரித்துள்ளார்.

தி.மலை மாவட்டம் சேத்துப் பட்டு ஒன்றிய குழுக் கூட்டம், ஊராட்சி ஒன்றிய அலுவல கத்தில் நடைபெற்றது. ஒன்றிய குழுத் தலைவர் ராணி அர்ஜுனன் தலைமை வகித் தார். ஆணையாளர்கள் பிரகாஷ், ரபியுல்லா, ஒன்றிய குழு துணைத் தலைவர் முருகையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலா ளர் மோகன் வரவேற்றார். கூட்டத்தில், சேத்துப்பட்டு ஒன்றியத்தில் உள்ள 49 ஊராட்சிகளில் நடைபெற்று வரும் திட்டப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பின்னர், ஒன்றிய குழுத்தலைவர் ராணி அர்ஜூனன் பேசும்போது, “கிராம மக்க ளின் நலன் கருதி, தமிழக அரசு அம்மா மினி கிளினிக்கு களை தொடங்கி உள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் மன்சூராபாத், ஓதலவாடி, பெரணம்பாக்கம் ஆகிய கிராமங் களில் அம்மா மினி கிளினிக் தொடங்க தயாராக உள்ளன.

ஆனால், அம்மா மினி கிளினிக்குகளை அமைச்சர் சேத்துப்பட்டு ஒன்றியத்தில் திறந்து வைக்கவில்லை, சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றி யத்தில் திமுகவைச் சேர்ந் தவர் தலைவர் என்பதால் புறக் கணிக்கப்படுகிறதா?. அப்படி என் றால், திறப்பு விழாவுக்கு நாங்கள் வரவில்லை.

மக்கள் நலன் கருதி அம்மா மினி கிளினிக்கு களை உடனடியாக திறந்து வையுங்கள். இல்லையென் றால், பொது மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x