Published : 08 Jan 2021 06:54 AM
Last Updated : 08 Jan 2021 06:54 AM
தமிழக பண்பாட்டு வரலாற்றில் தொ. பரமசிவன் ஒரு சகாப்தம் என்று அவரது நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு விழாவில் பேசியவர்கள் புகழாரம் சூட்டினர்.
தமிழக அரசு பொது நூலகத்துறை, மாவட்ட மைய நூலகம், வாசகர் வட்டம் ,தேசிய வாசிப்பு இயக்கம் இணைந்து தொ.ப. நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு விழாவை மாவட்ட மைய நூலகத்தில் நடத்தின. வாசகர் வட்டத் தலைவர் மரியசூசை தலைமை வகித்தார். துணைத் தலைவர் கணபதி சுப்பிரமணியன் வரவேற்றார். முதன்மைக் கல்வி அலுவலர் சிவக்குமார், மாவட்ட நூலக அலுவலர் வயலட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொ.பரமசிவன் படத்தை சென்னை விற்பனை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாய உறுப்பினர் மற்றும் கூடுதல் ஆணையர் தேவேந்திரபூபதி திறந்து வைத்தார். திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர் சரவணன், ஓவியர் சந்துரு, பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சீனிவாசன் , கவிஞர் கால சுப்பிரமணியன் ஆகியோர் பேசினர்.
டாக்டர் ராம குரு, கவிஞர் கிருஷி, ஆறுமுக நயினார், வரலாற்று ஆய்வாளர் செ.திவான், தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மையத்தின் ரமேஸ் ராஜா, டாக்டர் அக்கினி புத்திரன் உள்ளிட்டோர் நினைவேந்தல் உரையாற்றினர். தொ. பரமசிவன் தமிழக பண்பாட்டு வரலாற்றில் ஒரு சகாப்தம் என்று அவர்கள் புகழாரம் சூட்டினர்.
நூலகர் முத்து கிருஷ்ணன் நன்றி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT