Published : 07 Jan 2021 03:16 AM
Last Updated : 07 Jan 2021 03:16 AM
தொடர் மழையால் திருநெல்வேலி யில் பொங்கலுக்கான மண்பாண்டங் கள் தயாரிப்பு பணி பாதிக்கப் பட்டுள்ளது. விலை 10 சதவீதம் அதிகரித்துள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் கைவினை கலைஞர்களால் விதவிதமான வடிவங்கள் மற்றும் அளவுகளில் மண் பானைகள் தயாரிக்கப்படுகின்றன. பொங்கலுக்கு 2 மாதங்களுக்கு முன்னரே இப்பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபடுவர்.
திருநெல்வேலி மேலப்பாளையம் குறிச்சி, காருகுறிச்சி, ஆழ்வார்குறிச்சி, ஏர்வாடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொங்கலுக்கான பானை, அடுப்பு மற்றும் தீப விளக்குகள், பூந்தொட்டிகள் என, பல பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.
மாவட்டத்தில் ஆற்றுப்படுகைகள், குளங்களில் இருந்து மண்பாண்டங்கள் தயாரிக்க கைவினை கலைஞர்களால் ஆண்டாண்டு காலமாக மண் எடுக்கப்பட்டு வந்தது.
மண் எடுப்பதில் சிக்கல்
இந்த களிமண்ணுடன் ஆற்றங்கரைகளில் இருந்து கிடைக்கும் பசை தன்மையுள்ள குறுமண்ணை குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து மண்பாண்டங்களை தயாரிக்கின்றனர். ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே நீராதாரங்கள் மற்றும் ஆற்றங்கரைகளில் இருந்து மண்பாண்டங்கள் தயாரிக்க மண் எடுப்பதில் சிக்கல் நீடிக்கிறது. மணல் கடத்தல் என்று சிலர் செய்யும் தவறுகளால் மண்பாண்ட கலைஞர்களுக்கு தேவையான மண் கிடைக்காமல்போகிறது என, இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.இவ்வாண்டு பொங்கலுக்கான மண்பாண்டங்கள் தயாரிப்பு தொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மண்பாண்ட பொருட்களை சூளையில் வைத்து சுட்டு எடுப்பதற்காக பயன்படும் விறகு, வைக்கோல் போன்ற மூலப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால் மண்பாண்டங்களின் விலையும் இவ்வாண்டு 10 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.
விலை விவரம்
விதை நெல் பானைகள் ஒன்று ரூ.750 வரையிலும், ஜோடியாக வாங்கினால் ரூ.900 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த பானைகளில் ஆயில் பெயின்ட் மூலம் டிசைன் வரையப்படுகிறது. பொங்கலையொட்டி திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் பானைகள், அடுப்புகள் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகின்றன” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT