Published : 05 Jan 2021 08:23 AM
Last Updated : 05 Jan 2021 08:23 AM

திருச்சி மத்திய மண்டலத்தில் விநியோகம் தொடக்கம் 35.14 லட்சம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு

திருச்சி கோட்டை அமராவதி கூட்டுறவு சிறப்பங்காடியில் நேற்று பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.2,500 ரொக்கத்தை பெற்றுக்கொண்ட பயனாளிகள்.படம்: ஜி.ஞானவேல்முருகன்

திருச்சி

திருச்சி மத்திய மண்டலத்தில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங் கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி நேற்று தொடங்கியது.

திருச்சி மாவட்டத்தில் 8,04,260 ரேஷன் கார்டுதாரர்களுக்கு 1,225 ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.2,500 ரொக்கம் வழங்கப்பட உள்ளது. இதன் தொடக்க விழா பாலக்கரையில் உள்ள சிந்தாமணி கிடங்கு வளாகம் மற்றும் பேட்டை வாய்த்தலை ஆகிய இடங்களில் நேற்று நடைபெற்றது. ஆட்சியர் சு.சிவராசு தலைமை வகித்தார்.

ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் அரசின் விலையில்லா வேட்டி, சேலைகளை மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் என்.நடராஜன், பிற்படுத்தப்பட்டோர்- சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் எஸ்.வளர்மதி ஆகியோர் வழங்கினர். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் தா.பழனிகுமார், திருச்சி மாவட்ட அமராவதி நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை இணைப் பதிவாளர் கு.பொ.வானதி மற்றும் கூட்டுறவுச் சங்க அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம் மற்றும் விக்கிர மங்கலம் கிராமங்களிலுள்ள ரேஷன் கடைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில், ரேஷன் கார்டு தாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கி ஆட்சியர் த.ரத்னா பேசியபோது, “அரியலூர் மாவட்டத்தில் 440 ரேஷன் கடை களின் மூலம் 2,33,739 ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது” என்றார். நிகழ்ச்சிக்கு ஜெயங்கொண்டம் எம்எல்ஏ ஜெ.கே.என்.ராமஜெயலிங்கம் முன்னிலை வகித்தார்.

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் பகுதியிலுள்ள அமராவதி நியாயவிலைக் கடையில், எம்எல்ஏக்கள் இரா.தமிழ்ச்செல் வன், ஆர்.டி.ராமச்சந்திரன் ஆகி யோர் முன்னிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை மாவட்ட வருவாய் அலுவலர் சி.ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். அப்போது அவர், “மாவட்டத்தில் 282 ரேஷன் கடைகளின் மூலம் 1,81,851 கார்டு தாரர்களுக்கு பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது” என்றார்.

கரூர் மாவட்டத்தில் 578 ரேஷன் கடைகள் மூலம் 3.09 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங் கப்பட உள்ளது. கரூர் வெங்கமேடு விவிஜி நகரில் ஆட்சியர் சு.மலர் விழி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநில போக்கு வரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பணியை தொடங் கிவைத்தார். கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ ம.கீதா முன்னிலை வகித்தார். திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் ஏ.ஆர்.காளியப்பன் வாழ்த்திப் பேசினார்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ரேஷன் கடையில் ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி தலைமையில் நேற்று பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தை மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். அப்போது அவர், “மாவட்டத்தில் 1,024 ரேஷன் கடைகளில் 4,64,142 பேருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங் கப்பட உள்ளது” என்றார்.

தஞ்சாவூரில் ஆட்சியர் ம.கோவிந்தராவ் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநி லங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை தொடங்கிவைத்தார். தஞ்சாவூர் மாவட்டத்தில் 1,185 ரேஷன் கடை கள் மூலம் 6,67,941 ரேஷன் கார்டுதார்களுக்கு பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ஆட்சியர் வே.சாந்தா தலைமையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை மாநில உண வுத் துறை அமைச்சர் ஆர்.காம ராஜ் வழங்கினார். இதேபோல நன்னிலம், திருவாரூர், திருத் துறைப்பூண்டி பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளிலும் அமைச்சர் பங்கேற்றார்.

திருவாரூரில் செய்தியாளர் களிடம் அவர் கூறியபோது, “திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 726 ரேஷன் கடைகள் மூலம் 3,74,838 ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கப்பட உள்ளன” என்றார்.

நாகை மாவட்டத்தில் 736 ரேஷன் கடைகள் மூலம் 4,78,459 ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. திருமருகல் ஒன்றியம் பனங்குடியில் மாநில ஜவுளி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை தொடங்கிவைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x