Published : 05 Jan 2021 08:23 AM
Last Updated : 05 Jan 2021 08:23 AM
திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில் வரதட்சணை பிரச்சினையில் மனைவியை கொலை செய்த வழக்கில் கணவருக்கு ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பணகுடி போலீஸ் சரகம் தளவாய்புரத்தை சேர்ந்தவர் கர்ணன் (38). பணகுடியில் பர்னிச்சர் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி ரக்சியா ராஜபாய் (25). வரதட்சணை பிரச்சினை தொடர்பாக இவர்களுக்குள் தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 1.2.2013-ம் தேதி ராஜபாய் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக அவரது தாயார் அளித்த புகாரின்பேரில் பணகுடி போலீஸார் வழக்கு பதிந்து, கர்ணனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை திருநெல்வேலி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி இந்திராணி, கர்ணனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT