தேவிகாபுரத்தில் மக்கள் சபை கூட்டத்தில் பேசும் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு.
தேவிகாபுரத்தில் மக்கள் சபை கூட்டத்தில் பேசும் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எதிர்த்த மின்சார சட்டத்தை ஆதரித்தவர் பழனிசாமி திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு குற்றச்சாட்டு

Published on

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எதிர்த்த மின்சார சட்டத்தை ஆதரித்தவர் முதல்வர் பழனிசாமி என திமுக முன்னாள் அமைச்சர் எ..வ.வேலு குற்றஞ்சாட்டினார்.

திமுக சார்பில் அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற தலைப்பில் மக்கள் சபை கூட்டம் திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த தேவிகா புரத்தில் நேற்று நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசும் போது,“தமிழகத்தில் விவசாயிகள், பெண் கள், தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஆதரவான ஆட்சி நடைபெறவில்லை. பாஜக வுக்கு துணை போகும் ஆட்சியை நடத்துகின்றனர். பாஜக அரசு கொண்டு வந்த விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை ஆதரித்துவிட்டு, நானும் விவசாயி என முதல்வர் பழனிசாமி கூறிக்கொள்கிறார்.

அவர், விவசாயிகளுக்கு செய்தது என்ன? புதிய மின்சார ஒப்பந்தம் மூலம் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எதிர்த்தார். ஆனால், அந்த சட்டத்தை பழனிசாமி ஆதரித் துள்ளார். இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். அனைத்துத் தரப்பு மக்களுக்கும் எதிராக ஆட்சிநடத்தும் அதிமுக அரசை புறக் கணிக்க வேண்டும்.

தமிழகத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி அமைய வாக்களிக்க வேண்டும்” என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in