Published : 04 Jan 2021 03:21 AM
Last Updated : 04 Jan 2021 03:21 AM
வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற தகவல் தொழில்நுட்ப பிரிவினரின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்க வேண்டும் என திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தெரிவித்தார்.
திமுக கிழக்கு மண்டலத்திலுள்ள திருச்சி தெற்கு, மத்திய, வடக்கு, கடலூர் கிழக்கு, மேற்கு, திருவாரூர், தஞ்சை தெற்கு, வடக்கு, நாகை உட்பட 13 மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு (ஐ.டி விங்) நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது. திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், எம்எல்ஏவுமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, வடக்கு மாவட் டச் செயலாளர் காடுவெட்டி ந.தியாக ராஜன், மத்திய மாவட்ட பொறுப் பாளர் க.வைரமணி, மாநகரச் செய லாளர் மு.அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தலைமை வகித்து பேசும்போது, “வரும் சட்டப் பேரவை தேர்தலில் வெற்றி பெற்று, மு.க.ஸ்டாலினை முதல்வராக்குவதில் திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணியின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்க வேண்டும்.
அதற்காக நிர்வாகிகள், உறுப்பினர்கள் என ஒவ்வொரு வரும் திறம்பட தேர்தல் பணியாற்ற வேண்டும்’’ என்றார்.
சட்டப்பேரவை தேர்தலுக்கான பணிகளை திமுக தகவல் தொழில் நுட்ப பிரிவு நிர்வாகிகள் எவ்வாறு மேற்கொள்ள வேண்டு மென அப்பிரிவின் மாநிலச் செய லாளரும், மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏவுமான பி.டி.ஆர் பழனி வேல் தியாகராஜன் விளக்கினார்.
இதில் எம்எல்ஏக்கள் சவுந்தர பாண்டியன், ஸ்டாலின்குமார், மாநில துணைச் செயலாளர் சுப்பிரமணி, திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார், அருண், ரமேஷ், துணை ஒருங்கிணைப்பாளர்கள் சூர்யா, ரமேஷ், தொகுதி ஒருங் கிணைப்பாளர்கள் இன்பா, முரளி கிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT