Published : 03 Jan 2021 03:22 AM
Last Updated : 03 Jan 2021 03:22 AM

சேத்தியாத்தோப்பு அருகே பாரம்பரிய நெல் விவசாயிகள் கலந்துரையாடல்

சேத்தியாத்தோப்பு அருகே மழவராயநல்லூர் கிராமத்தில், "பாரம்பரிய நெல்லை மீட்டெடுப்போம் குழுவினர்" நெல்செல்வத்தின் வயலை பார்வையிட்டனர்.

கடலூர்

சேத்தியாத்தோப்பு அருகே பாரம்பரிய நெல் விவசாயத்தை மீட் பது குறித்து கருத்துரையாடல் நடந்தது.

சேத்தியாத்தோப்பு அருகே மழவராயநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் நெல் செல்வம். இவர்15-க்கும் அதிகமான பாரம்பரியநெல் ரகங்களை இயற்கை முறை யில் பயிரிட்டு வருகிறார். பயிரிடும் நெல்லை மதிப்பு கூட்டியும் விற்பனை செய்து வருகிறார். இவரது வயலை "பாரம்பரிய நெல்லை மீட்டெடுப்போம் குழுவினர்" நேற்றுபார்வையிட்டனர்.

பின்னர் மழவராயநல்லூர் ஊராட்சி மன்ற வளாகத்தில் பராம்பரிய நெல் விவசாயம் குறித்தகலந்துரையாடல் மற்றும் ஆலோச னைக்கூட்டம் நடைபெற்றது. நெல் விவசாயி நெல் செல்வம் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்றத்தலைவர் பிருந்தாவதி வரதராஜன் நிகழ்ச்சியை தொடக்கிவைத்தார்.

வடலூர் நுகர்வோர் உரிமை தலைவர் கோவிகல்விராயர், நமது நெல்லை காப் போம் மாநில ஒருங்கிணைப்பளர் ரகுநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில், ஒவ்வொரு விவசாயியும் ஒரு பாரம்பரிய நெல் ரகத்தை நட வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x