Published : 03 Jan 2021 03:23 AM
Last Updated : 03 Jan 2021 03:23 AM

தாமிரபரணியில் 2-வது நாளாக கரைபுரளும் தண்ணீர்

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டத்தில் அணைப்பகுதிகளில் நேற்றுமுன்தினம் பெய்த பலத்த மழையால் அணைகளுக்கு நீர்வரத்து கணிசமாக உயர்ந்தது. இதனால் 143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணை 2 வாரத்துக்குப்பின் மீண்டும் நிரம்பியது.

நீர்மட்டம் 142.45 அடியாக இருந்தது. அணைக்கு நேற்று காலை யில் விநாடிக்கு 2,037 கனஅடி தண்ணீர் வரும் நிலையில் 2,211 கனஅடி தண்ணீர் திறந்து விடப் பட்டது. இதனால் தாமிரபரணி ஆற்றில் 2-வது நாளாக நேற்றும் வெள்ளம் கரைபுரண்டது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 111.85 அடியிலிருந்து 112.30 அடியாக உயர்ந்தது. அணைக்கு 845 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. 330 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

பிற அணைகளின் நீர்மட்டம்: சேர்வலாறு- 144.52 அடி, வடக்கு பச்சையாறு- 28.50 அடி, நம்பியாறு- 10.72 அடி, கொடுமுடியாறு- 25 அடி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x