Published : 03 Jan 2021 03:23 AM
Last Updated : 03 Jan 2021 03:23 AM

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 10.57 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 2,500 ரூபாயுடன் பொங்கல் பரிசு தொகுப்பு நாளை முதல் வரும் 13-ம் தேதி வரை விநியோகம்

குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் வழங்கப்படவுள்ள கரும்புகள், வேலூர் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்துக்கு லாரிகளில் கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து ரேஷன் கடைகளுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்பட்டது. படம்: வி.எம்.மணிநாதன்.

வேலூர்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட் டத்தில் 10.57 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு நாளை முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படவுள்ளது. இதற்காக, லாரிகளில் கரும்பு லோடு வந்து சேர்ந்துள்ளது.

தமிழகத்தில் பொங்கல் பண்டி கையை முன்னிட்டு அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பாக அரிசி கார்டுதாரர்களுக்கு ரூ.2,500 பணத்துடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய் மற்றும் ஒரு முழு கரும்பு வழங்கப்படவுள்ளன. அனைத்து ரேஷன் கடைகளிலும் நாளை (4-ம் தேதி) முதல் வரும் 12-ம் தேதி வரை தினசரி 200 பேர் வீதம் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படவுள்ளது.

இதற்கான டோக்கன் வீடு, வீடாக வழங்கப்பட்டுள்ளது. இந்த டோக்கனில் குடும்ப அட்டைதாரர்கள் எந்த நாளில் பொங்கல் பரிசுத் தொகுப்பை வாங்க வேண்டும் என்று குறிப்பிடப் பட்டிருக்கும். அந்த குறிப்பிட்ட நாளில் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெறாதவர்கள், விடுபட்ட நபர்களுக்கு வரும் 13-ம் தேதி பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கவுள்ளனர்.

தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 10 லட்சத்து 56 ஆயிரத்து 777 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட வுள்ளன. பொங்கல் பரிசுத் தொகுப்பை ஒரு பையில் கொடுக்க ஏற்பாடுகளை செய்துள்ளனர். அதேபோல், ரேஷன் கடைகளுக்கு கரும்பு அனுப்பும் பணியும் நேற்று தொடங்கியது.

இதற்காக, காட்பாடியில் உள்ள கிடங்குக்கு லாரிகளில் கரும்பு லோடு வந்து சேர்ந்தது. அங்கிருந்து மூன்று மாவட்ட ரேஷன் கடைகளுக்கு தேவையான கரும்புகள் சரக்கு வாகனங்களில் எடுத்துச் செல்லப்பட்டன. திட்டமிட்டபடி நாளை முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்கான ஏற்பாடுகளை கூட்டுறவுத்துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x