Published : 02 Jan 2021 03:24 AM
Last Updated : 02 Jan 2021 03:24 AM
கள்ளக்குறிச்சியில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கோவிந்தராஜ பெருமாள், தேவி,பூதேவி சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
அதேபோன்று சிவகாமசுந்தரி சிதம்பரேஸ்வரர் கோயிலில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது. புத்தாண்டு என்பதால் ஏராளமானோர், அதிகாலை முதலே கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்ததோடு, காணிக்கை செலுத்தி வந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT