Published : 02 Jan 2021 03:25 AM
Last Updated : 02 Jan 2021 03:25 AM

ஈரோட்டில் மாகாளியம்மன் கோயில் உண்டியல் உடைப்பு

ஈரோடு:

ஈரோடு ரங்கம்பாளையத்தில் மாகாளியம்மன் கோயில் உண்டியலை உடைத்து திருடிச் சென்ற சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். ஈரோடு ரங்கம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே மாகாளியம்மன் கோயில் உள்ளது. நேற்று காலை கோயிலை பூசாரி திறக்க வந்தபோது, பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தது. கோயில் வளாகத்தில் உள்ள உண்டியல் காணிக்கை திருடப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக ஈரோடு தாலுகா போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விசாரணையில், திருடப்பட்ட உண்டியல் சடயம்பாளையம் புறவழிச்சாலைப் பகுதியில் புதரில் கிடந்தது கண்டறியப்பட்டது. உண்டியல் திறக்கப்பட்டு பல மாதங்களான நிலையில், அதில் எவ்வளவு தொகை இருந்தது எனத் தெரியவில்லை. கோயில் அமைந்துள்ள இடத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போலீஸார், அதில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் சிலரைத் தேடி வருகின்றனர்.

நேற்று முன்தினம் பழையபாளையம் ஓடை மேட்டில் உள்ள மதுரைவீரன் சக்தி மாரியம்மன் கோயில் உலோக சிலை மற்றும் உண்டியல் திருட்டு சம்பவம் நடந்த நிலையில், மீண்டும் ஒரு திருட்டு சம்பவம் நடந்துள்ள நிலையில், இரு சம்பவங்களிலும் ஒரே கும்பல் ஈடுபட்டு இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x