Published : 02 Jan 2021 03:25 AM
Last Updated : 02 Jan 2021 03:25 AM
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகை யில் பிரதான கட்சிகளான அதிமுக, திமுக கட்சிகள் தங்கள் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளன. இந்நிலையில், நாளை (3-ம் தேதி) ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டில் நடக்கும் மக்கள்சபைக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். அதனைத் தொடர்ந்து 6 மற்றும் 7-ம் தேதிகளில் தமிழக முதல்வர் பழனிசாமி ஈரோட்டில் பல்வேறு அரசு நலத் திட்டங்களை தொடங்கி வைத்தும், பிரச்சாரத்திலும் ஈடுபடுகிறார்.
முதல்வர் பழனிசாமியின் பிரச்சார பயணத்தின்போது, பல்வேறு சமுதாய அமைப்பினர் அவரைச் சந்தித்து கோரிக்கை மனுக்களை அளிக்கவுள்ளனர். இதில், ஈரோடு மாவட்டத்தில் குறிப்பிட்ட வாக்கு வங்கியைக் கொண்டுள்ள செங்குந்த முதலியார் சமுதாயத்தைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் முதல்வரைச் சந்திக்கவுள்ளனர்.
இதுதொடர்பாக செங்குந்தர் முதலியார் சமுதாய சங்கத்தின் நிர்வாகிகள் கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளில் 30 சதவீத வாக்குகளைக் கொண்டுள்ள செங்குந்தர் முதலியார் சமூகத் தினர் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக விளங்கு கின்றனர். ஈரோடு மட்டுமல்லாது நாமக்கல், சேலம், திருப்பூர், கரூர் மாவட்டங்களிலும் எங்கள் சமு தாயத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் அதிக அளவில் உள்ளனர்.
இந்நிலையில், தமிழக முதல்வரை சந்தித்து, ஈரோடு மாவட்டத்தில் உள்ள 7 பொதுத் தொகுதிகளில், இரு தொகுதிகளில் போட்டியிட செங்குந்தர் முதலியார் சமுதாயத்திற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என வலியுறுத்தவுள்ளோம். எங்கள் சமுதாய வாக்கு வங்கி குறித்து ஆதாரங்க ளுடன் முதல்வரிடம் தகவல்களை அளிக்கவுள்ளோம், என்றனர்.
இதேபோல், அருந்ததியர் சமுதாய அமைப்பினர், சுதந்திரப் போராட்ட வீரர் பொல்லான் நினைவு மண்டபம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி முதல்வரைச் சந்திக்கும் முடிவில் உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT