Published : 02 Jan 2021 03:25 AM
Last Updated : 02 Jan 2021 03:25 AM
குமாரபாளையம் லட்சுமிநாராயண சுவாமி கோயிலுக்குச் சொந்தமான இடத்தில், தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து உழவாரப்பணி மேற்கொண்டனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காவிரி பாலம் அருகே லட்சுமிநாராயண சுவாமி கோயிலுக்குச் சொந்தமான காலி இடம் உள்ளது. இதன் அருகில் விநாயகர் கோயில் உள்ளது. இங்கு அப்பகுதியினர் குப்பைகளை கொட்டி வந்தனர். இதனால், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. இப்பகுதியில் இறைச்சிக்கழிவுகள் கொட்டப்படுவதால் துர்நாற்றமும், தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டது.
கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் குப்பைகளைக் கொட்டுவதைத் தடுக்கும் வகையில், தன்னார்வலர்கள் பலர் ஒன்றிணைந்து உழவாரப்பணி குழுவை ஏற்படுத்தினர். இக்குழு சார்பில், கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் இருந்த இறைச்சிக்கடை அகற்றப்பட்டது. மேலும், அங்கு குவிந்திருந்த குப்பைகளை இயந்திரங்களைக் கொண்டு அகற்றிய உழவாரக் குழுவினர், நேற்று அப்பகுதியில் அரளி, செம்பருத்தி, உள்ளிட்ட மலர்ச்செடிகளை நட்டு வைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT