Published : 02 Jan 2021 03:26 AM
Last Updated : 02 Jan 2021 03:26 AM

தொடர் திருட்டு, சட்டம் ஒழுங்கு பிரச்சினையில் ஈடுபட்டவர்கள் 2020-ம் ஆண்டில் குண்டர் சட்டத்தில் 122 பேர் கைது நெல்லை மாவட்ட எஸ்பி மணிவண்ணன் தகவல்

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஆண்டு மணல் கடத்தலில் ஈடுபட்ட 10 பேர் உட்பட 122 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நெ. மணிவண்ணன் தெரிவித்துள் ளார்.

இது தொடர்பாக அவர் கூறிய தாவது:

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஆண்டு சட்டம் ஒழுங்கு பிரச்சினையில் ஈடுபட்ட 80 பேர், தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 11 பேர், கள்ளச்சாராய பேர்வழிகள் 2 பேர், பாலியல் குற்றவாளிகள் 9 பேர், போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை செய்தவர்கள் 10 பேர், மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் 10 பேர் உட்பட 122 பேர் குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 6 மாதத்தில் மட்டும் 86 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2019-ம் ஆண்டு 102 பேர் குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த ஆண்டு 20 பேர் கூடுதலாக இச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2020-ல் பதிவான 41 கொலை வழக்குகளிலும் குற்றவாளிகள் கைது செய்யப் பட்டுள்ளனர். கடந்த 2019-ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 6 வழக்குகள் அதிகமாக பதிவாகியுள்ளன.

கொள்ளை வழக்குகள்

கூட்டுக்கொள்ளை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு போன்ற 345 வழக்குகளில் 205 வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்க ளிடமிருந்து ரூ. 78,82,990 மதிப்புள்ள பொருட்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 9 பழைய சொத்து வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு ரூ. 5,29,000 மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன.

போதை தடுப்பு குற்றத்தில் 167வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.3,75,000 மதிப்புள்ள 75 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பாக 896 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ. 3,89,668 மதிப்புள்ள 769.74 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடந்த 2019-ம் ஆண்டை விட 759 வழக்குகள் கூடுதலாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

மணல் திருட்டு

சட்ட விரோதமாக ஆற்றுமணல் திருட்டு மற்றும் கடத்தல் சம்மந்தமாக 347 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 527 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 405 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சாலை விபத்துகள்

2020-ல் ஏற்பட்ட 720 சாலை விபத்துகளில் 147 பேர் மரணமடைந்துள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 131 சாலை விபத்துகள் குறைந்துள்ளன. சாலை விபத்தின் போது ஏற்பட்ட உயிரிழப்புகளும் 27.5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

ஆற்றுமணல் திருட்டு மற்றும் கடத்தல் சம்மந்தமாக 347 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 527 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 405 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x