Published : 02 Jan 2021 03:26 AM
Last Updated : 02 Jan 2021 03:26 AM
புத்தாண்டை முன்னிட்டு ஒருங் கிணைந்த வேலூர் மாவட்டத்தில் ரூ.6.65 கோடி மதிப்பிலான மதுபான பாட்டில்கள் விற்பனையாகியுள்ளன.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் நிர்வாகம் வேலூர் மற்றும் அரக்கோணம் என 2 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில், வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்கள் உள்ளடக்கிய வேலூர் டாஸ்மாக் மாவட்டத்தில் 111 மதுபானக் கடைகளும், ராணிப்பேட்டை மாவட்டத்தை உள்ளடக்கிய அரக் கோணம் டாஸ்மாக் நிர்வாகத்தில் 89 கடைகளும் உள்ளன.
புத்தாண்டு விற்பனை
புத்தாண்டை முன்னிட்டு வியாழக் கிழமை அதிகளவில் மதுபான பாட்டில்கள் விற்பனையானது. வேலூர் டாஸ்மாக் மாவட்டத்தில் மொத்தம் ரூ.4 கோடியே 15 லட்சமும், அரக்கோணம் டாஸ்மாக் மாவட்டத்தில் ரூ.2 கோடியே 50 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்றுள்ளன.ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் புத்தாண்டை முன்னிட்டு மொத்தமாக ரூ.6 கோடியே 65 லட்சத்தக்கு மதுபான பாட்டில்கள் விற்பனையாகியுள்ளது என்பது குறிப் பிடத்தக்கது.
எம்.ஆர்.பி விலை
வேலூர் மாவட்ட ஏஐடியுசி டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் ஜனவரி 1-ம் தேதி முதல் (நேற்று) எம்.ஆர்.பி விலையில் மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படும் எனஅறிவிக்கப்பட்டது. இதற்கு கூட்டுக்குழுவில் ஒப்புதல் கிடைக்காத நிலையில், எம்ஆர்பி விலையில் மதுபாட்டில் விற்பனை செய்வது தொடர்பாக பணியாளர்கள் மத்தியில் பரப்புரை செய்த பிறகு மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.ஆனால், வேலூர் மாவட்ட ஏஐடியுசி டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் நேற்று திட்டமிட்டபடி வேலூர் பழைய பேருந்து நிலையம், கரசமங்கலம் பகுதி டாஸ்மாக் கடையில் மட்டும் முதற் கட்டமாக எம்.ஆர்.பி விலையில் பில் போடப்பட்டு மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டது. இதற்கு பிற சங்கங்கள் கொடுத்த அழுத்தம் காரணமாக பில் போடும் பணி சிறிது நேரத்தில் நிறுத்தப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT