Published : 31 Dec 2020 03:20 AM
Last Updated : 31 Dec 2020 03:20 AM
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் நேற்று ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் சரவணன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் சண்முகசுந்தரம், துணை பொதுச்செயலாளர் பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மாவட்டச் செயலாளர் சிவசங்கர் வரவேற்றார்.
இதில், 41 மாதங்கள் பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். சாலைப் பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். உயிரிழந்த சாலைப்பணியாளர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
பணியாளர் சீரமைப்புக் குழுவை கலைத்து, அரசாணை 56-ஐ ரத்து செய்ய வேண்டும். வேலையில்லாத இளைஞர்களுக்கு அரசு துறையில் வேலை வழங்க வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
கரோனா காலத்தில் மரண மடைந்த முன்களப் பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், காவல் துறையினர், தூய்மைப் பணியாளர்கள், சாலைப் பணியாளர்கள், பத்திரிகை மற்றும் ஊடகத்துறையைச் சேர்ந்த வர்களுக்கு கரோனா பேரிடர் கால மரணமாக கணக்கில் கொண்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு பிறகு கோரிக்கை மனுவை ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT