Published : 30 Dec 2020 03:18 AM
Last Updated : 30 Dec 2020 03:18 AM
திருச்சி மாவட்டத்தில் இன்றும், நாளையும்(டிச.30,31) தமிழக முதல்வர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
இதுகுறித்து அதிமுக திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான என்.நடராஜன், திருச்சி புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் ப.குமார், புறநகர் வடக்கு மாவட்டச் செயலாளர் மு.பரஞ்ஜோதி ஆகியோர் தனித்தனியே விடுத்துள்ள அறிக் கைகளில் கூறியிருப்பதாவது:
தமிழக முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான பழனிசாமி, திருச்சி மாவட்டத்தில் இன்றும், நாளையும்(டிச.30, 31-ம் தேதிகளில்) தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதையொட்டி, அவருக்கு இன்று அதிமுக சார்பில் திருச்சி மாவட்ட எல்லையான போர்க்கன்பட்டி, நாய்க்கன்பட்டி மற்றும் தாளக்குடி ஆகிய இடங்களில் வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.
தொடர்ந்து, தொட்டியத்தில் வாழை தோட்டத் தொழிலாளர் களுடன் கலந்துரையாடல், அரிசி ஆலை உரிமையாளர்களுடன் சந்திப்பு, திருச்சியில் கட்சி நிர்வாகிகளுடன் சந்திப்பு உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார்.
பின்னர், நாளை ரங்கம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யும் முதல்வர் பழனிசாமி, சோமரசம்பேட்டையில் மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சந்தித்துப் பேசுகிறார். தொடர்ந்து, மணப்பாறையில் பொதுமக்கள் சந்திப்பு, திருவெறும்பூரில் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் சந்திப்பு, திருச்சியில் வணிகர் சங்கப் பிரதிநிதிகள், மருத்துவர்கள், வழக்கறிஞர்களுடன் சந்திப்பு, நத்தர்வலி தர்காவில் வழிபாடு ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். மேலும், மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகில் நாளை மாலை 6 மணியளவில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.
எனவே, அனைத்து நிகழ்ச்சிகளி லும் கட்சியின் அனைத்து நிர்வாகிகள், தொண்டர்கள் பெருந்திரளாக பங்கேற்க வேண் டும் என வேண்டுகோள் விடுத்துள் ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT